Sunday, 7 September 2014

திருமணத்தில்

ஏ புள்ள
அந்த ஆளுவோல
நவுரச்சொல்லு
பட்டுகிடப்பான்
புள்ளக முகத்த மரச்சிகிட்டு...

இவனுகளோட
முதுக பாக்கவ
ஓடியாந்தேன்
இம்புட்டு கஷ்டப்பட்டு

ஏ கிழவி
நீ வரலன்னு
யார் அழுதா...?

அப்றமா பாக்க வீடியோ
வேணும்ல
உனக்கெல்லாம் புரியாது
போ..போ...

அடப்பாவியோளா
வேலயெல்லாம் விட்டுப்போட்டு
பத்திரிக்க வச்சானேன்னு
வந்தா நாரமவன்
இந்த விரட்டு விரட்டுரானே..

வீட்டுக்குள்ளேவச்சு
நடத்தி போட்டாவா புடிச்சு தள்ளு
ஊரக்கூட்டி முதுக பாக்க சொல்லாத
போக்கத்தவனே.....





7 comments:

  1. இன்றைய விசேசங்களைப் பார்க்க வரும் வயதானவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒலிக்கும் குரலும் இதுவே தான், எதார்த்த தொனியில் அழகான சிந்தனை...

    ReplyDelete
  2. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. யதார்த்தம் .... இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே தான் எப்பவோ பார்க்கப் போகிறோம் என்று இப்ப பார்க்கும் அனைவரையும் மறைத்துத்தான் வீடியோ எடுக்கிறார்கள்

    ReplyDelete
  4. அதானே..அழைத்துவிட்டு போட்டோ பிடிக்கமுடியலேன்னு கத்தினா எப்படி?

    ReplyDelete
  5. கல்யாணவீட்டில் நடக்கும் நிகழ்வை அருமையாக சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி
    உண்மை தான் பல சடங்குகளும் இன்று வீடியோ பிடிப்பவர்களின் கைகளில் சுருங்கித் தான் போயிருக்கிறது.. என்ன செய்ய எதிர்காலத்தில் பார்க்க வீடியோ வேண்டுமே!!!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...