Sunday, 7 September 2014

எங்கு தொடங்குவது?

எங்கு தொடங்குவது?

நேற்று அருங்காட்சியகம் சென்றிருந்தேன்.ஒவ்வொருமுறையும் என்னை அதிசயிக்க வைக்கின்றது...கற்பகத்தருவாய்...

புதுப்பிக்கப்பட்டு புதிதாய் மிளிரும் அதன் மரப்பலகையைக்கண்ட போது வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை...தன் பெயர்களைப்பொறிப்பதில் மனிதனுக்கு உள்ள ஆர்வம்...ச்சே.வரலாற்றுச் சின்னங்களில் எழுத எப்படி மனம் வருகின்றது?
நம் பொக்கிஷமல்லவா அது?அதை நாமே சிதைக்கலாமா?பொது எதுவாயிருந்தாலும் சிதைக்கலாம் என்ற என்ணத்தை எந்த வகுப்பில் கற்று தந்தோம்....

ஏதாவது செய்யனுமே..எங்கு ஆரம்பிப்பது..கல்லூரி மாணவர்களிடத்திலா?பள்ளி மாணவர்களிடத்திலா?

புதுகை இளைஞர்கள் கவனத்தில் கொள்வார்களா?ஒரு மாணவன் ஆரம்பித்தால் போதும் மற்றவர்கள் அணி திரண்டு விடுவார்கள்

அங்கு உள்ள பாதுகாப்பாளரிடம் குழந்தைகளைக்கூட்டி வருகின்றேன் எழுதியவற்றை எல்லாம் அழிக்க என்று கூறி வந்தேன்..இத்தனைக்கு எல்லா இடங்களிலும் பணியாளர்கள் உள்ளனர்...என்ன சொல்வது...?

3 comments:

  1. உண்மை தான் அக்கா வரலாற்றில் தடம் பதிக்க இப்படி எளிய வழியை கைகொள்கிறார்கள் இந்த பைத்தியகாரர்கள்.

    ReplyDelete
  2. என்ன செய்வது நாமாவது காப்பாற்றுவோம் என நீங்கள் ஆரம்பித்து வைக்க நினைத்திருக்கிறீர்களே பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. சரியாச் சொன்னீங்க கீதா..வரலாற்றை சரியாய் அறியாததால் அதனைப் போற்றத் தெரியாததால் வந்த கேடு..கணக்கிற்கும் அறிவியலுக்கும் கொடுக்கும் மதிப்பை மொழிக்கும் வரலாற்றிற்கும் கொடுக்க வேண்டும்.
    //அங்கு உள்ள பாதுகாப்பாளரிடம் குழந்தைகளைக்கூட்டி வருகின்றேன் எழுதியவற்றை எல்லாம் அழிக்க என்று கூறி வந்தேன்.// சபாஷ்!! :)
    பணியாளர்கள் கடனே என்று வேலையில் இருக்கின்றனர் கீதா..இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...