Tuesday, 16 September 2014

இன்று பிறந்தார்....நமக்காக....

இன்று பிறந்தார்....நமக்காக....

தமிழர் தலை நிமிரக்காரணமானவர்.



இன்னுமும் அடிமை மோகத்தில் வாழும் தமிழருக்கும் தன்மானம் உண்டு என்று அறைகூவியவர்.

சுதந்திரப்போராட்டத்தில் தன் பதவிகளை எல்லாம் தூக்கி எறிந்து கதர் மூட்டைச் சுமந்து தெருதெருவாக விற்றவர்......

பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கி புத்தகத்தைக் கொடுங்கள் என முழங்கியவர்....

இன்றைய அரசியலுக்கு அடித்தளமிட்ட தன்னலமற்ற தொண்டர்...

கடவுளை காரணம் காட்டி மனிதரை ,மனித நேயத்தை மறந்தவர்களைத் துணிவோடு எதிர்த்தவர்...
:
”தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மணடைச் சுரப்பை உலகு தொழும் “

என பாரதிதாசனால் போற்றப்பட்டவர்....

பெண்களால் பெரியார் என பாராட்டப்பட்டவர்....

இன்றைய விஞ்ஞானத்தை அன்றே எடுத்துக்கூறிய தீர்க்கதரிசி...

அவர் தாம் பெரியார்...அவரே பெரியார்....
தலைவணங்குகின்றேன் ....அவரின் தொண்டுக்கு...

11 comments:

  1. பெரியாரின் நினைவு சுமந்த அருமையான பதிவு!

    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி...சகோ

      Delete
  2. "மானமும் அறிவும் மனிதற்கு அழகு"- மனிதனின் வளம் சிந்தனை என கூறி சிந்திக்க செய்தவர்... நான் சொல்வதை ஏற்றுக்கொள்ளாதே சிந்தி என்றவர் - பெரியார்

    ReplyDelete
    Replies
    1. உண்மை..வருகைக்கு நன்றி..

      Delete
  3. உணர்வோடு கூடிய பெரியார் பிறந்த தினக் கவிதை! பெரியார் பிறந்த தின வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்....

      Delete
  4. அருமை! மூடப்பழக்கங்களை எதிர்த்த அவரின் தொண்டு சிறப்பானது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி சார்..

      Delete
  5. பெரியாரை நினைவில் கொள்வது அருமை...

    ReplyDelete
  6. வணக்கம் கவிஞரே! தந்தை பெரியார் பிறந்தநாள் பதிவு மிக்க மகிழ்ச்சியளித்தது. நானும் ஒரு பதிவு எழுத உட்கார்ந்த போது தங்கள் பதிவு வந்து நின்றது. வாழ்த்துகள் சகோதரீ! பார்க்க -http://valarumkavithai.blogspot.in/2014/09/blog-post_31.html நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரரே...
      உங்கள் கட்டுரைப் பார்த்தேன்..என் பதிவைப் பற்றி குறிப்பிட்டுள்ளமைக்கு நன்றியும் மகிழ்வும்...

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...