Friday, 11 July 2014

வெளிநாட்டு வாழ்க்கை

குருதிகள் வியர்வையாக
வலியில் மலரும்
குடும்பத்தின் மகிழ்வு
ஊரல்லாம் கொண்டாடும்
வெளிநாட்டு வாழ்க்கை,,,!

உற்ற தாய் மனம்
உள்ளுக்குள் தவிக்கும்...!

உணர்வுகள் அடக்கி
கண்ணீரைத் தேக்கி
ஆசைகள் அறுத்து
விரல் தொடும் நாளுக்காய்
காத்திருப்பில் உயிரான மனைவி......!

அப்பாவின் கைப்பிடித்து
பள்ளிக்குச் செல்லும்
குழந்தைகளை ஏங்கும்
குவளை விழிகளுடன்காணும்
 மகள்...!

இத்தனை அன்பையும்
இளமையும் தொலைத்து...
வேதனையில்....
உழைப்பை உறிஞ்சும்
வெளிநாட்டுக்காரனின் ஏவலில்
கருகும் அவனது உள்ளம்..!




5 comments:

  1. நாங்கலாம் பார்த்து, பொறாமைப்பட்டு ஏங்கும் உங்க வெளிநாட்டு வாழ்க்கையில் இம்புட்டு வலியும், வேதனையும் இருக்கா!?

    ReplyDelete
  2. உறவுகளைப் பிரிந்து, உறவுகளுக்காக உழைக்கும் வாழ்க்கை அல்லவா வெளிநாட்டு வாழ்க்கை

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ...நன்றி..

      Delete
  3. எப்போதும் ஊக்கப்படுத்தும் உங்களின் அன்பிற்கு நன்றி..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...