Saturday, 12 July 2014

குழவி3

நீருக்காய் காத்திருக்கின்றன
பசுமைக்குழந்தைகள்....
எழுந்திருவென புட்கள் எழுப்ப
 இசைகேட்டு எழ மனமில்லை
இன்னும் எழுப்பென வம்பாய் நானும்...!
பூமிக்குள் புதைந்த நீரை உறிஞ்சி
பூச்செடிகளுக்கு பூச்சொரிய
போட்டிக்கு வந்தது மேகமும்

நீர்விடச் சென்றவளை
 நீராட்டி மகிழ்ந்தது சாரல் கீதத்தால்....!
உணவூட்டும் தாயை நனைத்து சிரிக்கும்
குழந்தையென....

6 comments:

  1. அருமை சகோதரி...
    நினைவு நாண்களை மீட்டும் கவிதை
    www.malartharu.org

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரி

    கவிவரிகள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...