Saturday, 21 June 2014

இப்படி கேள்வி கேட்டால்?

1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?


வேண்டாம்மா போதும்னு தோணுது இப்பவே பெண்களின் முன்னேற்றத்திற்கு ஏதும் செய்து அவர்கள் என்னை நினைத்தால் போதும் அந்நாளில்...

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எனக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் .செருப்பு தைக்கும் தொழிலாளியின் லாவகத்தை ரசிப்பேன்.தற்போதைய ஆசையாய் பறை அடிக்க,கீ போர்டு வாசிக்க பயில வேண்டும்.15 பேர் இருந்தால் பறை கற்று தர ஆள் ரெடி...

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

எதிர் வீட்டு 8 மாதக் குழந்தையின் சேட்டையைக் கண்டு காலையில்...

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

பகல் என்றால் புத்தகத்துடன் தோட்டத்தில், இரவெனில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அல்லது மொட்டைமாடியில் நினைவுகளின் துணையுடன் பால்யங்களை அசைபோட்டுக்கொண்டு .

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?

என் வாழ்வில் நிகழ்ந்த தவறுகள் அவர்கள் வாழ்வில் நிகழாமல் நடக்க வேண்டுமென..

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

மனிதநேயமற்று நடக்கும் செயல்களை....

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

.என் நெருங்கிய நண்பர்களிடம்

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

அந்த அளவு என் வளர்ச்சி உள்ளதென எண்ணி மேலும் வளர்வேன்

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

என்ன சொல்வது? வேறு துணை வேண்டும் என வலியுறுத்துவேன் உடனே அல்ல வலி மறைந்த பின்

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

புத்தகம்,பாட்டு,முகநூல்..... 
 

17 comments:

  1. பதில்கள் அருமை ..
    மொத்தத்தில் நீங்கள் தேர்ச்சியுற்று விட்டீர்கள் சகோதரி..
    நாலு கவிதை
    ஐந்து வலி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ,தேர்ச்சி சதவீதம் எவ்ளோ சார்?

      Delete
  2. // மனிதநேயமற்று நடக்கும் செயல்களை //

    பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. ஒ!! இங்கும் போட்டுடீங்களா??!! ரொம்ப ரொம்ப நன்றி அக்கா! உங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அருமை! பறை மேட்டர் சூப்பர்! எனக்கு கூட அவர்கள் ஆடியபடி இசைக்கும் விதம் ஆச்சர்யமாக இருக்கும். முன்பெல்லாம் தமிழர் திருமண விழாக்களில் பறை தான் இசைக்கபட்டதாம். அத்தகு கலைஞர்கள் அதிகம் வாழ்ந்த ஊர் என்பதால் அது மணப்பாறை (மணப்பறை) என்று அழைக்கப்பட்டதாக எங்க ஊருக்கு ஒரு வரலாறு சொல்கிறார்கள், மொத்தத்தில் விடைகள் எல்லாம் அட்டகாசம்:) நன்றி அக்கா!

    ReplyDelete
    Replies
    1. உனக்குத்தான் நான் நன்றி சொல்லனும்மா.பறை கத்துக்க 4 பேர் ரெடி இன்னும் 11 பேர் தேடிக்கிட்டு இருக்கேன் .தமிழினி மணிமாறன் குழு வந்து கத்துக்கொடுப்பாங்க 3 நாள் வகுப்பு. பார்ப்போம் ஆள் சேரட்டும்.

      Delete
  4. சிறப்பான பதில்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ந.ன்றி சார் தவறாது வரும் உங்களின் பாராட்டுக்கு

      Delete
  5. கற்றுக் கொண்டே இருப்பது மிகவும் பிடிக்கும் அருமையான பதில்

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளைக்கு புதுசா ஏதும் கற்றுக்கொண்டால் பயனுள்ளதாய் கழித்த நிறைவு வரும்மா.

      Delete
  6. அருமையான பதில்கள்..
    பறை கற்பது நல்ல விசயம்..எனக்கும் ஆசை..ஆனால் இடம் வேறாக இருக்கிறதே..
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம் 15 பேர் இருந்தா அங்கேயே வருவாங்கம்மா.நன்றிம்மா.

      Delete
  7. ரசிக்கும் படியான பதில்கள் .ஏற்கனவே பிநூட்டஹ்டில் வாசித்தேன். பறை கற்கும் அசை வந்துவிட்டதா நல்லது.
    என் பதிலையும் முடிந்தால் பாருங்கள். வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  8. தங்கள் வலையிலும் இக்கேள்வி பதில் தொடர்கிறதா
    அருமையான பதில்கள்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  9. வித்தியாசமான பதில்களுடன் பதிவு பிரமாதம்!

    சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  10. முத்துக்கு முத்தாக
    பத்துக்குப் பத்தாக
    கேள்வி - பதில்
    நன்றாக இருக்கிறதே!

    ReplyDelete
  11. நீங்க பொறுப்பான டீச்சர்னு காமிச்சிட்டீங்க...
    பறை கற்று வாசிக்கும்போது மறக்காம சொல்லுங்க..
    நானும் வந்து பார்க்க ஆசை. திண்டுக்கல் சக்தி பெண்கள் குழுவின் போர்ப்பறை இடிமுழக்கமாய்க் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...