Tuesday, 24 June 2014

திணை மயக்கம்

திணை மயக்கம்
---------------------------
நெல்லை ஜெயந்தா அவர்களின் நூல் திணை மயக்கம்...
ஓவ்வொன்றும் மயக்கவே செய்கின்றது.
அறிமுகமே அருமையாய்

“கரும்பலகைகள்
எழுத்தை
எனக்கு
அறிமுகப்படுத்தின!
இந்த
வெண்பலகைகள்
எழுத்தால்
என்னையே
அறிமுகப்படுத்தின”

எனத் துவங்கி

”புதைத்தது
ரோஜா
முளைத்தது
மல்லிகை”

என மென்மையாகவும் சமூக அக்கறையுடனும் சிறந்த ஓர் கவிதை நூலைப்படித்த நிறைவு.கவிதைய படிச்சா  தூங்க விடாம நம்மைச் சுண்டி இழுக்க வேண்டுமென்பார் தோழர் எட்வின் .
சுனாமியாய் சுருட்டிக்கொள்ளும் கவிதைகளும் உண்டென்பதை நெல்லை ஜெயந்தா அவர்களின் கவிதைகளைப்படித்ததும் உணர்ந்தேன் .நல்ல நூலைப் படித்த உணர்வுடன் மகிழ்வாய் அவருக்கு என் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.முடிந்தால் படியுங்கள்..

4 comments:

  1. அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பததாண்டுக்கு முன்பே படித்து, அவரையும் அழைத்து வாழ்த்தி, இங்கேயும் அழைத்துப் பேச வைத்து... மிக அருமையான கவிதைத் தொகுப்பு.. ஒரு சில நூல்களில் ஒன்றிரண்டு கவிதைகள்தான் தேறும் சிலவற்றில் பல தேறும். மிகச்சிலவற்றிலேயே பெரும்பான்மை தேறும் இந்தத் தொகுப்பு மூன்றாம் வகை. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  3. ///புதைத்தது
    ரோஜா
    முளைத்தது
    மல்லிகை”///
    அருமை
    நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அறிமுகத்திற்கு நன்றி. படிப்பேன்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...