Friday, 13 June 2014

பவித்ரா



சென்ற ஆண்டு ஹதீஜா போலவே இந்த ஆண்டு பவித்ரா கொஞ்சம் முரட்டுத்தனமும் .அறிவும் உள்ள குழந்தை.நார்மல் சைல்ட் அல்ல.சட்டென்று அடித்து விடுவாள் மற்ற மாணவிகளை.முகத்தில் அடித்தாற் போல் பட்பட்டென்று பேசுகின்றாள் எதை செய்ய சொன்னாலும் முடியாது போவென்றே கூறுகின்றாள்.நல்லவேளை என்னை பிடித்து விட்டது அவளுக்கு.சாக்லேட்டும் ,பாராட்டும் தான் இப்போதும் கை கொடுக்கின்றது.என் அருகிலேயே அமரவைத்துள்ளேன். எழுத தெரிகின்றது.கொஞ்சம் படிக்கின்றாள்.
நேற்று மதியம் கை கழுவும் இடத்தில் கல்லால் குழந்தைகளை அடித்துக் கொண்டிருந்தாள்.பத்தாம் வகுப்பு ,பன்னிரெண்டாம் வகுப்பு குழந்தைகள் கூட அவளைச் சீண்டி மகிழ்கின்றன. வருத்தமாயிருந்தது.இப்பதான் அவளை பள்ளியை விரும்பும் படி ஆக்கியுள்ள நேரத்தில் இப்படி....
சீண்டிய குழந்தைகளிடம் அவளின் நிலையைக் கூறி முடிந்தால் அவளுக்கு சாக்லேட் கொடுத்து அன்பாயிருங்களென அறிவுறுத்தி விட்டு பவித்ராவிடம் வந்து அந்த அக்காவை கண்டிச்சிட்டேன்மா இனி உன்ன வம்பிழுக்க மாட்டாங்க ....ஏதும் பிரச்சனை என்றால் என்னிடம் தான் கூறனும் கல்லால் அடிக்க கூடாதென்றேன்.. சிரிப்புடன் தலையாட்டினாள்....
இந்த குழந்தையையும் மென்மையாக்கி பிற குழந்தைகளுடன் இயல்பாய் பழக்க வைக்க வேண்டும் என்ற மன உறுதியுடன் நான்...

4 comments:

  1. வணக்கம்
    குழந்தைகள் என்றால் குறும்புகள் இருக்கத்தான் செய்யும்.... நல்ல பிள்ளையாக மாற்ற வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பு...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
  2. உங்கள் முயற்சி கைகூட வாழ்த்துக்கள் கீதா

    ReplyDelete
  3. சீரிய பணி சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...