Wednesday, 23 April 2014

தேர்தல் நாள்

இந்தியாவின் தேர்தல் நாள் 24.04.2014
------------------------------------------------------------------
மனிதன் மதிக்கப்படும் நாள் இன்று மட்டுமே.கண் தெரியாதவர்,முதுமையில் தள்ளாடும் தாத்தா பாட்டிகள் நடக்க முடியலன்னா கட்டிலோடு தூக்கி கொண்டு வந்து விட்டு போகும் வாசல் வரை மனித நேயம். உள்ள போய்ட்டு திரும்பிய பின் இவர்களாகவே செல்லவேண்டும்.திடீர் பாசத்தின் காரணம் தெரிந்தாலும் அதை வரவேற்கும் முதுமை.தள்ளாடுபவர் எல்லாம் காத்திருந்து கறை வாங்கி பெருமையோடு செல்வர்.புதிதாய் ஓட்டு போடுபவரோ பதட்டத்துடன் வந்து போகும் போது காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு பெருமிதம் பொங்கச் செல்வர்.

அறிவொளியில் கற்றவர் பெருமையாய் கையெழுத்திட பொறுமை தாங்காத அலுவலர் கை பிடித்து இழுக்க சுவையான போராட்டம்.

கிராமத்து மக்கள் ஓட்டு போடுவதை பெருமையாக நினைக்க.வசதி உள்ள,அரசை குறை கூறி பொழுதை களிக்கும் சிலர் என்னத்த போட்டு என்னத்த செய்ய என்ற அலட்சியத்தில்.

5 comments:

  1. வணக்கம்

    கிராமத்து மக்கள் ஓட்டு போடுவதை பெருமையாக நினைக்க.வசதி உள்ள,அரசை குறை கூறி பொழுதை களிக்கும் சிலர் என்னத்த போட்டு என்னத்த செய்ய என்ற அலட்சியத்தில்.

    இன்னும் வழிப்புணர்வுதேவை.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான எதார்த்தமான பார்வை

    ReplyDelete
  3. நேரிய பார்வை

    ReplyDelete
  4. அனைவரும் வாக்களிக்க முன்வர வேண்டும்

    ReplyDelete
  5. உண்மை தான் இன்னும் கிராமங்களால் தான் நாடு வாழ்கிறது.
    நல்ல பதிவு டீச்சர்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...