Friday, 4 April 2014

ஏன் படிக்கல?

ஏன் படிக்கல?
------------------
கலங்கிய சிறுமியை
தலைவருடி இதமாய்
ஏண்டாம்மா?
என்னாச்சு?
சாப்டியா?
பதமாய் கேட்க
விழி மேகம் மடைதிறக்க
சாப்டல டீச்சர்...பசிக்குது!

குடிகார அப்பனால் சூடுபட்ட அம்மா
வலியில் சுருண்டு படுத்தவளிடம்
பசிகூற மனமின்றி......
தண்ணீரால் பசியாற்றி
சண்டை மறக்கவே
பள்ளிக்கு வந்தேன்

ஏதும் புரியல டீச்சர்..
ஏது படிக்க?
என்ன செய்ய...?

6 comments:

  1. பல இடங்களில் மனதை கலங்க வைக்கும் உண்மை...

    ReplyDelete
  2. வணக்கம்

    கவிதையின் வரிகள் சோகம் நிறைந்தவை.....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  3. சமூக அவலமொன்றை சட்டென பொட்டில் அடிக்கும் கவிதை! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. தலை கோதிய விரல்களுக்கு வணக்கங்கள் ....

    ReplyDelete
  5. மனதை கனக்கச் செய்யும் கவிதை

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...