Monday, 28 April 2014

ஒரு நிமிடம் நினைப்போமா..!


 -காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார்....
அவர் மகளின் குரலாய்....

அப்பா டாட்டா
-------------------------
உன் கைகளில் தவழ
உன் மடியில் தூங்க
உன் கைகோர்த்து நடக்க
தாடி குத்தும் முகத்தை
தாங்கி முத்தமிட
உன் பார்வையில்
உலகு காண
கனவுகளுடன் காத்திருந்தேன்.....
பறந்து வந்து அணைத்து மகிழ்வாயென
பாதை நோக்கி காத்திருந்தேன்
அம்மாவின் கை பிடித்து....

பெட்டியில் தூங்குறியே
வெயில் அதிகமுன்னா
பனிக்கட்டியில் உறங்குற...

எனை தூக்கும் கைகளில்
எந்திரத்தை தூக்கி
எல்லை காக்கையில்
எதிரியவன் சுட்டான்னு
எல்லாரும் சொல்றாங்கப்பா..

கண்விழித்து நீ காக்க
கண்டபடி சுத்துற
அண்ணன்களுக்கும் ,அக்காக்களுக்கும்
என் தவிப்ப எப்படி சொல்ல...

அம்மாக்கு துணையிருப்பேன்
நானும் உன்வழியில்
நடந்திடுவேன்....
அன்னை நிலம் காத்திடுவேன்
போய் வா அப்பா..!













3 comments:

  1. :( பத்து நாட்கள் பேசிவிட்டு மறந்துவிடுவர்...

    ReplyDelete
  2. கலங்க வைத்த கவிதை! வீர வணக்கங்கள்!

    ReplyDelete
  3. பெட்டியில் தூங்குறியே
    வெயில் அதிகமுன்னா
    பனிக்கட்டியில் உறங்குற...-
    நெகிழ வைத்த வரிகள் - நெடுநாள்
    நினைவிருக்கும் நிகழ்வு .. நன்றி கவஞரே.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...