Thursday, 17 April 2014

சுழல்காற்றாய்

பெண்ணின்
அழகு ,அன்பு, தாய்மையென
கடிவாளம் போட்ட குதிரையென
கவிதைகளின் பாதையில்....

பெண்ணின்
அறிவைப் போற்றிய
வீரத்தை வியந்த
தெளிவைப் பாரட்டிய
அரசியல் அறிந்த
கவிதைகள் காணாமல்
கலைந்தோடுகின்றேன்
பாலை நிலத்தின்
சுழல்காற்றாய்....!

11 comments:

  1. டீச்சர் நீங்கள் கஸ்தூரியின் "அடா' கவிதை படிக்கவில்லை என நினைக்கிறேன். கணினி மென்பொருள் மேதை லவ் லேஸ் அடா பற்றிய கவிதை http://www.malartharu.org/2014/02/lady-love-lace-ada.htmlஉங்கள் மனம் இளைப்பாறலாம்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா,படித்தேன் இது போன்ற கவிதைகளே இனி உருவாகட்டும்

      Delete
  2. பார்த்தேன் பெண்ணின் அறிவைப்போற்றும் கவிதைகளே இனி தோன்றட்டும்.நன்றிம்மா

    ReplyDelete
  3. நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. கவிதை அருமை கவிஞரே..

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...