Sunday, 13 April 2014

தமிழ் புத்தாண்டு

வெப்ப காற்றினால்
வியர்வையில் குளியல்.
குளமோ மனித மனம் போல் வறண்டு
நீர்தொட்டியும்...
சாதியினால் சரிகின்றது மனிதம்
மதம் பிளக்குமதை..
ஊழல் அரசியல்
ஊழலுக்குள் அதிகாரிகள்
சொல்லவே முடியாத
பெண்களின் பாதுகாப்பற்ற நிலை
சந்ததிகளை சீரழிக்கும் சமூகம்
இவைகளுக்கிடையில்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தை யா?,சித்திரையா?
சொல்வதா வேண்டாமா
குழப்பத்தில் தமிழரின் நிலை
என்ன கெட்டுப்போச்சு
இரண்டையும் கொண்டாடுவோம்னு ...
வாழ்த்துக்கள் குவிகின்றது..
உண்மையறியாமலே!



7 comments:

  1. எனக்கும் இந்த குழப்பம் உண்டு சகோ அதனால் தான் வாழ்த்துபவர்களுக்கு திரும்ப வாழ்த்துவதோடு சரி:))
    நச்சுன்னு தான் சொல்லிருக்கிறார் பாரதிதாசன்!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ.நானும் உன் வழியில்

      Delete
  2. தமிழன் நித்திரையில்தான் இருக்கிறான்.
    அதனால்தான் தமிழ்ப் புத்தாண்டு கூடு அரசியலாக்கப் படுகிறது

    ReplyDelete

  3. வணக்கம்!

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சித்திரைத் திங்கள் இருந்து வருகிறது,

    வட்ட வடிவத்தில் கணக்கிடப்படும அறுபது ஆண்டுகள்
    தொடா்ஆண்டாக எண்ண வேண்டுமென எண்ணித் திருவள்ளுவா் ஆண்டைத் தமிழ் அறிஞா்கள் உருவாக்கினாா்கள்

    உலகில் உள்ள மற்ற இனத்தவாின் ஆண்டுகள் தொடராக இருப்பதைப் போல் நம்மாண்டும் இருப்பதுதான் நமக்கு நலங்கொடுக்கும்,

    சாதி இந்துக்கள் இதை எதிா்ப்பது இயற்கையே.

    சித்திரை மதத்தின் புத்தாண்டாக இருந்துவிட்டுப் போகட்டும்
    அதை நாம் எதிா்க்கவோ துாற்றவோ வேண்டாம்

    தைத் திங்களைத் தமிழ்மொழித் புததாண்டாகத் துாய தமிழா்கள் ஏற்றுக் கொண்டாடுவோம்.

    தையே தமிழாின் புத்தாண்டு! உன்னுயிா்ப்
    பையே மணக்கும் படா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா.

      Delete
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...