Saturday, 8 March 2014

பார்க்க முடிகின்றதா உங்களால்...?

பார்க்க முடிகின்றதா உங்களால்...?
-------------------------------------------
இன்னும் வன்புணர்
இப்போது தான் உரைக்கிறது
ஆசிட் ஊத்து
ஆலைக்கரும்பாய் சக்கையாக்கு
வெறியாட்டம் ஆடு...

ஒன்று சேர
வெற்றி கொள்ள
படியென ஏற்கிறோம்
இரு மாத குழந்தை முதல்
தொண்ணூறு வயது பாட்டி வரை
உன் இச்சையின் பலியாய்..

மானம் போகுமென்று
மறைத்த காலம்
மலையேறிப் போச்சு....

நியாயம் கேட்க
நீதி கேட்க
குரல் ஓங்கியாச்சு...

மது,மாதின்
போதையில் நீ.....

ஆண் இனத்தின் அவமானச்
சின்னங்களை ....
நிலம் பிளப்பது போல்
நீர் விழுங்குவது போல்
தீ உண்ணுவது போல்
எழும்பும் பெண்ணினம்...

12 comments:

  1. சகோதரிக்கு வணக்கம்
    அநியாயம் கண்டு ஆர்பரித்து எழுந்த கவிதை மிக நன்று. ஆம் மானம் போகுமென தயங்கி நின்றது போதுமென விரைந்திடும் பெண் இனம் தன்மானம் காக்க!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.கொடுமைகள் அதிகமாகின்றன.இருந்தாலும் வீழ மாட்டோம் எழுவோம் நன்றி

      Delete
  2. ஐயோ..படம் நெஞ்சைப் பிளக்கிறதே..

    எழும்பும் பெண்ணினம்..கண்டிப்பாக..இப்பொழுதே!

    ReplyDelete
    Replies
    1. நிஜமாக பார்க்கவே முடியலம்மா.வாழும் அந்த பெண்ணின் நிலை.ஏதாவது செய்தே ஆகவேண்டும்.நன்றி.

      Delete
  3. பல கொடுமைகளும் மலையேறிப் போக வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாக்கு நிறைவேறட்டும் சார்.நன்றி

      Delete
  4. இது எப்பொழுதிலிருந்து ஆரம்பிக்கிறது எனப்பார்க்க வேண்டும்,புறையோடிபோன புத்தியைக்கொண்டவர்கள் பெண்களோடு பிறந்தவர்கள்தானே?பின் எப்பொழுது எங்கிருந்து இம்மாதிரியான விஷச்சிந்தனை முளைவிடுகிறது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஆண் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு.களைவோம் உங்களைப் போன்றாவர்களின் உதவியோடு.நன்றி சார்.

      Delete
  5. உலக மகளிர் தினத்தில்
    நியாகம் கேட்க
    நீதி கேட்க
    குரல் ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. .விரைவில் நீதி கிடைக்கட்டும் சார்.நன்றி

      Delete
  6. டீச்சர் அருமை குரல்கொடுத்து என்னபயன் குறைந்தபாடில்லையே! நன்றி.

    ReplyDelete
  7. குறையும் நம்புவோம் தோழி

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...