Thursday, 27 March 2014

புங்கைபூக்கள்

காலையில் 
வாசலில் பூப்படுக்கை
புங்கைமரத்தின் கைவண்ணமாய்..

அழகில் மயங்கி கூட்ட
தயங்கி அள்ளிக்கொட்டி
திரும்பும்முன்

அடுக்கிவைத்த பொருட்களை
கலைத்து சிரிக்கும் குழந்தையென
மீண்டும் பொரியரிசியாய்...

புங்கைப்பூக்கள்...

2 comments:

  1. ரசித்தேன்...

    ஒன்றை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்... அதாவது ஒவ்வொரு பதிவிற்கும் தலைப்பு இடலாம்... அது பல விதத்தில் உதவும்... நன்றி...

    ReplyDelete
  2. நிகழ்வை காட்சிப்படுத்திய வரிகள் சிறப்புங்க.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...