Monday, 24 March 2014

தூப்புக்காரி-மலர்வதி

2012-ஆம் ஆண்டு இளம் படைப்பாளருக்குரிய சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்ற நாவல்.


பூமி மடியைச் சுத்தப்படுத்தும் உயர்ந்த மனிதர்களுக்காக சமர்ப்பிக்க பட்டிருக்கும் நூல்.

       அறிந்த ஆனால் முழுமையாக அறியாத ஒரு சமூகம் படும் அவலத்தை அவர்களின் மொழி வாயிலாக அறியவைக்கும் நூலாக “தூப்புக்காரி

“அசுத்தப்படுத்துகிறவனுக்கு அழுக்கின் கொடூரம் தெரியாது.ஆனால் அதை அள்ளுகிறவனை மட்டும் சாதியில் குறைந்தவன் என தள்ளி வைக்க முடிகின்றது.ஈக்களிலும் ,புழுக்களிலும்,நாற்றத்திலும் உழைத்து வாழ்வு ஆதாரம் தேடுபவர்களுடன் ஒரு நிமிடமாவது சென்று அமரும் உயிர் நேய எண்ணம் பிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுதப்பட்ட நூல்”என ஆசிரியர் மலர்வதி கூறுகிறார்.

முற்றிலும் புதிய உலகை,சிறு வயதில் பார்த்து அருவருத்து ஒதுக்கப்பட்ட மனிதர்களின் வாழ்வியலை...காட்சிப்படுத்துகிறது..சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தனமாய் மணக்கின்றது அவர்களிடையே மனித நேயம்.

ஜெயமோகனின்” ஏழாம் உலகை” தொடர்ந்து படிக்க இயலாமல் கண்ணீர் கண்களை மறைக்க அமர்ந்திருந்த நிலையை மீண்டும் இந்நாவல் தந்துள்ளது.

வேற்று கிரகத்தில் வாழ்வதற்கான வழி தேடும் உலகில், இப்படி ஒரு அவல வாழ்க்கை வாழும் மக்களை கண்டு கொள்ளாமல் வாழ எப்படி முடிகின்றது .

எளிய மக்களின் யதார்த்த வாழ்வை கனகம் ,பூவரசி, மாரி மூலமாகவும்,அவர்களை விட மேல் நிலையில் உள்ளவர்களின் சுயநலப்போக்கையும்,சாதீய வன்முறையையும் தூப்புக்காரி படம் பிடித்துக்காட்டுக்கின்றாள்.

உண்மை வாழ்வை படிக்க முடியாமல் சாப்பிட்டதெல்லாம் வாந்தியாய் வெளியே வரத்துடித்தது சில இடங்களில்.ஆனால் இதையே வாழ்வாகக் கொண்ட மக்களின் நிலையை உணர்கையில் மனம் வலிப்பதை தடுக்க முடியவில்லை.
மனித நேயம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் “தூப்புக்காரி”
முடிந்தால் முழுவதும் படியுங்கள்....




 

9 comments:

  1. ஆழ்ந்த சுருக்கமான விமர்சனமாக இருந்தாலும் நன்று... படிக்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. அபடிங்க கட்டாயம் சார் நன்றி

      Delete
  2. நல்ல நூல்,இது போன்ற நூல்கள் பல எழுத வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அவர்கள் சாக்கடையில் வாழ்ந்தாலும் சந்தணமாய் மணக்கிறார்கள்.
    மக்கள் பலரும் சந்தணத்தைப் பூசிய பிறகும், சாக்கடையாய் துர்நாற்றம் வீசுகிறார்களே
    அவசிய்ம் வாங்கிப் படிக்கிறேன் சகோதரியாரே

    ReplyDelete
  4. நிறையக் கேள்விப்பட்டும் இன்னும் படிக்காமல் இருக்கும் ஒருநூல் தலித் இலக்கியத்தின் மற்றொரு உச்சம் என்கிறார்கள். அவசியம் வாங்கிப் படிக்கவேண்டிய பட்டியலில் உள்ளது. விரைவில் படிக்க உங்கள் விமர்சனமும் தூண்டியது நன்றி கவிஞரே!

    ReplyDelete
  5. உண்மைதான் தோழர்.படித்து முடிக்க மன திடமும் வேண்டும்.நன்றி

    ReplyDelete
  6. படித்திருக்கிறேன். நெகிழ வைக்கும் அருமையான நாவல். நன்றி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...