ஆகி முதல் நாள் பள்ளி செல்கிறான்பள்ளியின் முதல்வர் அவன்மீது மிகுந்த அன்பு காட்டுகிறார்.எப்போதும் அவனது உணர்வுகளைப் புரிந்து செயல்படுகிறார்.ஆகியை கேலி செய்த மாணவனை பள்ளியை விட்டு அனுப்புகிறார்.
ஏனெனில் ஆகி Treacher collins syndrome ஆல் பாதிக்கப்பட்டு 27 முறை அறுவைச் சிகிச்சை செய்து தற்போதுள்ள முகத்தைப் பெற்று இருக்கிறான்.
எப்போதும் அவன் விண்வெளி வீரரின் முகமூடியை அணிந்து தனது சிதிலமான முகத்தை மறைத்துக் கொள்கிறான்.அவனது அன்னை நல்ல எழுத்தாளர்.அவரது உலகமாக ஆகி . ஆகி பிறந்த பிறகு அவளது அக்கா தனிமையை உணர்கிறாள்.அவளது பாட்டியே அவளுக்கு பிடித்த நபராக இருந்திருக்கிறார்.பாட்டியின் இறப்பு மேலும் அவளுக்கான நபரைத் தேட வைக்கிறது .அவளது தோழியின் விலகலும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாத சூழல்.
ஆகி பள்ளி சென்று படிக்கும் காலம் வந்துவிட்டது என அவனது அம்மா அவனை பள்ளியில் சேர்க்கிறார்.
பள்ளியில் மாணவர்கள் செய்யும் கேலியில் மனம் உடைந்து அழுகிறான்.
அவனது அம்மா நீ பள்ளிக்குச் செல்லும் போது விண்வெளிக்குச் செல்வது போல மகிழ்வுடன் செல் என்ற வார்த்தை அவனது துன்பங்களில் இருந்து அவனை மீட்டெடுக்க முயல்கிறது.
தனது முதல்நாள் பள்ளி அனுபவத்தை தனது பெற்றோரிடம் கூற மறுப்பவனைக் கண்டு அம்மா வேதனைப்படுகிறாள்.பள்ளிக்குப் போக வேண்டாம் என்று அவள் கூறுகையில் பள்ளிக்குச் செல்வேன் என்று அவன் உறுதியாகக் கூறுகிறான்.
அறிவியல் பாடத்தில் அவனது ஆர்வம் நண்பர்களைத் தருகிறது.ஒவ்வொரு குழந்தையும் ஆகியின் மேல் அன்பு செலுத்தத் துவங்குகின்றனர்.
குழந்தைகளுக்கான உலகை பெரியவர்கள் புரிந்து கொள்ள முயல்வதே இல்லை.
அவர்களின் துன்பங்களுக்கு மருந்தை அவர்களே கண்டு பிடிக்கின்றனர்.
அவனது ஒவ்வொரு அசைவையும் புரிந்து கொண்டு நடக்கும் அம்மா அப்பா அக்கா அவர்கள் வளர்க்கும் நாய் கூட.
முகமூடியை கழற்றி எனது மகனின் முகத்தை நான் காண வேண்டும் என அன்பு ததும்பி கூறும் அப்பா .
அவனது மகிழ்வே தனது வாழ்வாக எண்ணி வாழும் அம்மா...
மனதை நெகிழ வைத்த உண்மைக் கதை.ஆசம்.
குழந்தைகளுக்கான உலகை உலகம் எப்போது படைக்கப் போகிறது?
இப்படிப்பட்ட படங்கள் தமிழில் வரும் காலம் எப்போது?
இப்படத்தை அறிமுகம் செய்த ஆசிரியர் ரெ.சிவா விற்கு மனம் நிறைந்த நன்றி.
மு.கீதா
நல்லதொரு திரைப்படம்.
ReplyDeleteநன்றி.
மிக்க நன்றி சகோ
Deleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteநன்றி அண்ணா
Delete