Monday 31 August 2020

பதில்கூறு

கணிகைநான்
குலமகள் ஆக விரும்பியே
உன்னில் கலந்தேன்...
வானம் வசமானது
 உனது அண்மையால்
உலகே கிடைத்ததாக
உயிர்ப்புடன் வாழ்ந்த என்
மனம் புரியாமல்...
என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் நீ?.
உன் பேர் சொல்லபிறந்த மகள்
உன்னாலே ஆணினம் வெறுத்து..
துறவறம் பூண்டாள்...
உதறித்தள்ளி மறந்தவனே 
நளன் வழிவந்தவன் தானே நீ.
அன்பின் மேன்மையை
அறியவேயில்லை
என்னிலும்
அவளிலும்.

2 comments:

  1. ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும். மயங்கியது, பிரிந்தது, கொலையுண்டது, கட்டியவள் தெய்வம் ஆனது, பெற்றவள் துறவியானது எல்லாம் ஊழ் வினை என்ற ஒரு சொல்லில் அடக்கி விட்டார். 

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...