பரியேறும் பெருமாள் .
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைக் கூறும் துன்பியல் கவிதை .
கறுப்பி ரயிலின் முன் அடிபட்டு சிதறும் காட்சியில் துவங்கும் படம் நமது ஆதிக்க மனதையும் அடித்து நொறுக்கி கலங்க வைக்கிறது என்றால் மிகையில்லை .ஏன் சிகப்பி தண்டவாளத்தில் கட்டிவைக்கப்பட்டாள்என்பதை குறியீடாக துவங்கி இறுதியில் இரட்டைக்குவளைகளில் குறியீடாக முடிக்கும் இயக்குனர் படத்தில் வாழ்ந்திருக்கிறார் .
தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைக் கண்டு பயப்படும் நிலையும் ,ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தமிழைக் கண்டு பயப்படும் நிலை மிக யதார்த்தம் .
மாணவர்களுக்குள் சாதீயத்தை புகுத்துபவர்கள் வெறி பிடித்த மிருகத்தை விடக் கொடுமையானவர்கள் .
மூத்திரத்தைக் குடின்னு சாதாரணமாக திட்டுவதைக் கேட்டதுண்டு ஆனால் அதை அனுபவிக்கும் கொடுமையை உணர வைத்துள்ளார் கதிர் மிக அற்புதமான நடிப்பால் .
எல்லோரையும் இயல்பாகக் காட்டும் இயக்குனர் கதாநாயகியாக வருபவர் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை என்ன சொல்வது .தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?
கருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?
தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆதிக்கவாதிகளின் மனதில் படிந்திருக்கும் மனநிலையை ,அதை உடைத்தெறியத் துடிக்கும்விளிம்பு நிலை மக்களின் மனதை காட்சிப்படுத்தியவிதம் அருமை .
மனதில் குடியேறிய பரியன் வாழ்வில் உயரட்டும் .
சீழ் பிடித்த சாதீயத்தை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற வில்லை என்றால் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வது என்பது சிக்கலே .
மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....?
சிறந்த படம்...
ReplyDeleteநன்றி சார்
DeleteVery Nice review. மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....? How true it is ?
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteநல்ல விமர்சனம். பாராட்டுகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ
DeleteAndha naai paeyar karuppi thaana?? Sigappinu potrukeenga
ReplyDeleteகருப்பி தான்
Delete//தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?
ReplyDeleteகருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?
//
எப்போது? எப்போது?
படம் பார்க்கும் ஆவல்தூண்டும் விமர்சனம்.
நன்றி மா
Delete