முப்பது ஆண்டுகள்பணி நிறைவு சூலை 2018 உடன்.
20.7.1988.ஆசிரியப்பணியில் பணி ஏற்ற முதல் நாள்.
இன்று தான் பணியேற்றதுபோல நினைவு.முப்பது ஆண்டுகள் கடந்து விட்டன.
19 வயதில் ஆசிரியராக அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவளூரில் பணி ஏற்ற போது ...இருந்த ஆர்வம் இன்னும் குறையவில்லை.
இரண்டு பேரூந்துகள் ஏறி புதுப்பாளையத்தில் இறங்கி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும்.பெட்டிக்கடை கூட இல்லாத நிலையில்...... மாணவர்களுக்கு தேவையான ஸ்டேஷனரி,கிராம மக்களுக்கு தேவையான மாத்திரைகள் அரியலூரிலிருந்து வாங்கிச் செல்வது வழக்கம்.இன்று வரை மாத்திரை குழந்தைகளுக்காக பையில் ....பள்ளிக்கு முன் பன்றியை நெருப்பில் வாட்டிக் கொண்டு இருந்தனர்.ஈசல் வறுத்து உண்பார்கள்.நகரிலேயே வாழ்ந்த எனக்கு ஒவ்வொன்றும் வியப்பாக இருந்தது.
வெள்ளந்தியான மக்களும் மாணவர்களும் அன்பான தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.... இன்று வரை தொடரும் உறவுகள்.
1989சூன் மாதம் பளிங்காநத்தம் என்ற பள்ளிக்கு மாறுதலில் சென்றேன்.அங்கும் பேரூந்து வசதி இல்லை.3கிமீ நடந்து போக வேண்டும்.மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திற்கு 5கி.மீ நடந்து போக வேண்டும்.மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் வருகையில் ஒருவர் பின் ஒருவராக கைப்பிடித்து ஆடைநனைந்து பள்ளிக்குச் சென்றதும்.முதன்முதலில் டி வி எஸ் 50 யில் பள்ளிக்கு சென்றதும் மறக்க முடியாத அனுபவம்..
அடுத்து மேலப்பழுவூரில் பணி மாறுதலில் சென்றேன்.அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் ஒன்றியத்தில் பெரிய பள்ளி.23 பேருடன் பணி.... அங்கு பணியாற்றிய 10 வருடங்களில் அப்பள்ளி மிகச் சிறந்த பள்ளியாக .... ஆசிரியர்களின் ஒற்றுமைக்கு எடுத்து காட்டாக விளங்கியது.
அங்கு என்னிடம் படித்த மாணவர்கள் நல்ல பணியில்... நேர்மையாக பணிபுரிந்து வருகின்றனர்.அவர்களால் முடிந்த அளவு சமுக சேவை செய்கின்றனர்....என்னுடன் இன்றும் தொடர்பில் உள்ளனர்.
அப்பள்ளி உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட போது நானும் சில ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளிக்கு உட்படுத்தப் பட்டோம்.
அரியலூரைச் சுற்றியுள்ள சிமெண்ட் ஆலைகள் என்னுடலை பாதிக்க வேறு ஊருக்கு பணிமாறுதல் பெற வேண்டிய நிலை . கிடைத்த தலைமை ஆசிரியர் பணியையும் உடல் நிலை காரணமாக மறுக்க வேண்டிய நிலை.
வாழ்க்கை சூறாவளியாக சுழற்றி அடித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையூர் அ.உ.நி.பள்ளிக்கு 2002 ஆம் ஆண்டில் வந்தேன்.
தங்கை குடும்பம் மற்றும் நல்ல தோழமைகள் அமைந்ததால் பிற மாவட்டத்திற்கு வந்த உணர்வு இல்லை.
2005 ஆம் ஆண்டில் இப்போது பணி புரியும் அ.ம.மே.நி.பள்ளிக்கு நானும்எனது இனிய தோழி கிருஷ்ண வேணியும் மாறுதலில் வந்தோம்.வாழ்க்கை நல்ல நண்பர்களை அறிமுகம் செய்து எத்தனையோ பிரச்சினைகளிலும் நிமிர்ந்து நிற்க வைத்துள்ளது.
ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்கள்.. வாழ்க்கை அதிசயமானது மரணம் தொடும் பிரச்சினைகளைக் கொடுக்கின்றது.....
சிலநேரம் விண் தொடும் மகிழ்வைத் தருகின்றது.எது வந்த போதும் சமமாய் ஏற்கும் பக்குவத்தை உருவாக்குகிறது.
எள்ளல் செய்வோரை அலட்சியப்படுத்தி குறிக்கோளை நோக்கி நடக்க வைக்கின்றது.
முப்பது ஆண்டுகள் முடிவில் ஒரு கவிஞராக ,எழுத்தாளராக,சமூக அக்கறை நிறைந்த ஆசிரியராக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
புதுக்கோட்டை கவிராசன் அறக்கட்டளை 2015 ஆம் ஆண்டு
புதுக்கோட்டை ஆனந்தஜோதி இதழ் கவிக்குயில் விருது,
சென்னை தென்றல் சமூக அறக்கட்டளைகளை மூலம் புரட்சி தென்றல் விருது.
,எனது முதல் கவிதை நூலான "விழி தூவிய விதைகள்" நூலுக்கு வளரி சிற்றிதழ் வழங்கிய கவிப்பேராசான் மீரா 2015 ஆண்டுக்கான விருது..,
2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது.....
என் எனது உழைப்பிற்கும் ...இனியும் உழைக்கவும் ஊக்குவிக்கும் காரணிகளாய்அமைந்துள்ளன.
அன்பான கண்டிப்பான அம்மாவாகவே ஆசிரியப் பணியை முப்பது வருடங்கள் முடித்தாயிற்று.
எனைப் போலவே என் தோழிகள் கிருஷ்ண வேணி மற்றும் சுமதியும் முப்பது வருடங்கள் முடித்த மகிழ்வை பள்ளியில் கொண்டாடினோம் ...
எங்களுடன் பணிபுரிந்த ஆசிரியர் திருமிகு அஞ்சலி தேவி அவர்கள் எங்கள் மகிழ்வில் பங்கு பெற்று வாழ்த்தியதை மறக்க முடியாது.அனைத்து ஆசிரியர்களும் பரிசுகள் வழங்கி அன்பால் திணற அடித்தனர்.
மனிதர்களை சேர்த்து வைத்த மகிழ்வில் ஆசிரியப் பணியைத் தொடர்கின்றேன்.
வீதி கலை இலக்கியக் கள ஒருங்கிணைப்பாளராக... இலக்கிய வாழ்விலும்...
முப்பது ஆண்டு காலப்பணியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் விரும்பும் அம்மாவாகவும் மாறியுள்ளேன் ...என்பதே...மனநிறைவான ஒன்று.
நான் பிறந்த அரியலூர் என்னை நல்ல ஆசிரியராக உருவாக்கியது.
நான் வாழ்கின்ற புதுக்கோட்டை என்னை நல்ல கவிஞராக செதுக்குகின்றது.
தற்போது பாடநூல் தயாரிப்பு பணியில் இருப்பது என்ஆசிரியப்பணியின் உச்சம் எனலாம்.
மனநிறைவாக முப்பது ஆண்டுகள் முடித்து இருந்தாலும் நான் செல்ல வேண்டிய பாதையின் தூரம் அதிகம்.....
வாழ்வதற்கான பொருளை உண்டாக்கி தடம் பதித்து மறைய வேண்டும்..
காலம் தான் வாய்ப்பு அளிக்க வேண்டும்....

30 வருடங்கள்..... வாவ்....
ReplyDeleteதங்கள் பணி மேலும் மேலும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மிக்க நன்றி சகோ
Deleteபடிக்கப் படிக்க மகிழ்வாக இருக்கின்றது சகோதரியாரே
ReplyDeleteவாழ்த்துகள்
மிக்க நன்றி அண்ணா
Deleteஇவ்வாறான அனுபவங்களைப் பகிரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவற்றது. பெரிய சாதனையே. வாழ்த்துகள்.
ReplyDeleteசெய்யும் பணியினை மனநிறைவோடு முடிப்பவர்கள் சிலரே...
ReplyDeleteதங்களது சமூகத்தொண்டுகள் தொடரட்டும்...
மிக்க நன்றி சகோ
Deleteபத்தொன்பது வயதில் பணியில் இணைய பாக்கியம் செய்திருக்கவேண்டும். முப்பதாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள். மென்மேலும் பணியில் சிறக்கவும் வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteவாழ்த்துக்கள் , இனிமையான வருத்தமான எரிச்சலான எனப் பல வித நினைவுகள் கூடிய 30 வருட நினைவுகள் ..... இனியெல்லாம் சுபமே . சமூகத்தொண்டுகள் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஉங்களின் தன்னம்பிக்கையையும்...
ReplyDeleteவிடா முயற்சியையும்...
தாய்மை நிறைந்த நற்பண்பையும்....
சகிப்புத் தன்மையையும்...
ஒரு பெண்ணாக நீங்கள் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் எதிர்கொண்டு வென்ற துணிச்சலையும்...பாராட்டுகின்ற அதே வேளையில் நீங்கள் இன்னும் மென்மேலும் பல சாதனைகள் புரிந்து வாழ்ந்த வாழ்கைக்கு அர்த்தம் கற்பிக்கும் வகையில் உங்களின் மனித நேய செயலால் வாழ்வினில் தடம் பதிக்க வேண்டும் என அந்த இயற்கை அன்னையை வேண்டுகிறேன்...

Deleteமகிழ்ச்சி. எங்கள் அருமை மகளுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி அப்பா
Deleteவாழ்த்துகள்!!!
ReplyDeleteமிக்க நன்றி
Deleteவாழ்த்துகள் சகோ..!!!
ReplyDeleteமிக்க நன்றி சகோ
Deleteஆசிரியர்கள் பணி புரிவதைவிட பணிபுரியும் இடத்தை அடைவதே சவால் நிறைந்ததாக உள்ளது. தங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதையும் மீறி உற்சாகம் குன்றாமல் பல பள்ளிகள், பல ஊர்கள், சில மாவட்டங்கள் எல்லாம் கடந்து 1988 அண்டு தொடங்கி இன்றுவரை 30 ஆண்டுகள் பணியாற்றியது பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சார்
Deleteஅர்த்தமுள்ள வாழ்க்கைக்கு ஆண்டுக்கணக்குப் பெரிதல்ல!
ReplyDeleteஇன்னும் பல்லாண்டுகள் இப்போதையும்விட இனிய பல நற்பணிகளை ஆற்றிட அண்ணனின் அன்பான வாழ்த்துகள் மா!
(ஆமா… எனக்குப் பிரியாணி போச்சே!!!)
மிக்க நன்றி அண்ணா
Delete