10.12.17.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.
சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.
19 வருடங்கள் கழித்து பார்க்கிறான் கறாரான ஊபர் டிரைவராக Osthi Bala என்கிற பாலு.
1990முதல் 2002 வரை அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரில் பணிபுரிந்த போது ... என்னிடம் படித்த பாலு என்கிற வாலு.
இவன் அண்ணன் என்மீது அதிக பிரியமாக இருக்கும் Selva Kumar .
அதே சேட்டை, அதிகாரம் , எப்போதும் வாய் ஓயாமல் பேசும் பேச்சு.
சின்ன வண்டில லக்கேஜ் ஏத்த கூடாதுன்னு சண்டை போட்டுக்கொண்டு வண்டியை எடுத்தவன்.என்னை பார்த்ததும் நீங்கள் கீதா டீச்சர் தானேன்னு ஆச்சரியமாக கேட்டான் .
நான் யாருப்பா நீ என்றேன் . என்ன டீச்சர் என்னை தெரியவில்லையா நான் தான் பாலு என்றான்.
அப்பா மாதிரியே நீயும் கார் வாங்கிட்டியா என்றேன்.
நான் தான் அப்பவே டிரைவராக தான் ஆவேன்னு சொன்னேன்ல என்றான்.
பாருங்கள் உங்களப்போல வலதுகை ல வாட்ச் கட்டிருக்கேன் என்கிறான்.என்னா அடி அடிப்பீங்க டீச்சர் அதனால் தான் நல்லா இருக்கேன் என்கிறான்.
சென்னை ட்ராஃபிக் ல அட்டகாசமாக வண்டி ஓட்டியவனை பார்த்து ரசித்து கொண்டே வந்தேன்.
சொந்த காரில் ஜம்முன்னு என்னை இறக்கி விட்டு பணம் வாங்கவே மாட்டேன்னு கண்கலங்க மறுத்தவனின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வது.
மாணவர்கள் மனதில் நிற்கும் ஆசிரியராக வாழ்கிறேன் என்பதை விட வேறு என்ன வேண்டும்?.

தன்னிடம் படித்த மாணவனை நாம் எதிர்பார்க்காமல் வெளியூரில் பார்க்கும் போது அதிலும் அவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை
ReplyDeleteஉண்மை தான்..... மனம் பெருமிதத்துடன் இருந்தது.எப்போதும் இல்லாத உணர்வில்.வருகைக்கு மிக்க நன்றி சார்.
Deleteமாணவர் மனதில் நிற்கும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிரியப் பணியின் பெருமையே இதுதானே
நன்றி சகோதரியாரே
வாழ்த்துக்கள்
உண்மை தான் அண்ணா.மிக்க நன்றி.
Deleteஉங்கள் மாணவருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteமாணவனின் மனதில் நிற்கும் ஆசிரியைக்கு வாழ்த்துகள்! மனம் சுடும் தோட்டாக்கள் பற்றிய என் பார்வையை என் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன். முகநூலிலும் இணைப்புக் கொடுத்திருக்கிறேன். நேரங்கிடைக்கும் போது பார்க்கவும்.
ReplyDeleteமிக்க நன்றி மா.தாமதமானதற்கு வருந்துகிறேன்.மதிப்புமிக்க விமர்சனம்.... நன்றி நன்றி.
Deleteமாணவனை கவர்ந்த ஆசிரியர்.
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
ஆசிரியப் பணியின் கொடைகள் இத்தகு சந்திப்புகள்
ReplyDeleteவாழ்த்துகள்