World Tamil Blog Aggregator Thendral: அறம்-திரை விமர்சனம்

Friday 17 November 2017

அறம்-திரை விமர்சனம்

இது சினிமா...'அறம்'

இப்படக்குழுவினரே காலத்தின் பிரதிபலிப்பு..
முதலில் அட்டகாசமான நடிப்பால் மதிவதனியாகவே வாழ்ந்துள்ள மதிப்பிற்குரிய தோழர் நயன்தாரா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.


ஒரு பெண்ணை அறிவுடைய வராக,தன்னம்பிக்கை மிக்கவராக,ஆளுமைத்திறனுடையவராக,துணிச்சல் மிக்கவராக,சுயம் உடையவராக, சுயமரியாதை உடையவராக,எளியவராக,மக்களுக்காக போராடுபவராக,சமூக அக்கறை உடையவராக,அதிகாரத்திற்கு அஞ்சாத வராக.....காட்டியுள்ள இயக்குநருக்கும்..படக்குழுவினருக்கும் மனம் நிறைந்த மரியாதையுடன் கூடிய நன்றியை முதலில் கூறிக்கொள்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக ஊடகங்கள் காட்சிப்படுத்திய பெண்மயத்தை உடைத்து எறிய, காசுக்கு விலை போகாத அசாதாரண துணிச்சல் வேண்டும்.

அரைகுறை ஆடையில் கவர்ச்சிக்காக பயன்படும்பொருளாகவே திரையில் காட்டப்படுபவளை முதன்முதலாக மக்களோடு மக்களாக ஒரு மதிக்கக் கூடிய மனிதியாக படைத்த நல்ல உள்ளங்களுக்கு ஒரு ஹாட்ஸ் ஆஃப்.
காலத்தின் கட்டாயம் அறம்.
விஷச் செடிகளுக்கு நடுவே முளைத்த மூலிகை.
நாயக வழிபாட்டை உடைத்தெறியும் நிதர்சனம்.
குரலற்றவர்களுக்கான இடி முழக்கம்.
காமிராக்கள் கருப்பும் அழகென காட்டும் அற்புதம்.
எது தேவை என மக்களுக்கு உதவும் சிறு துரும்பு.
குழியில் வீழ்ந்து கிடக்கும் திரைக்கதையை, புறக்கணிக்கப்பட்ட மக்களை, ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைகளை, மக்களின் சுயமரியாதையை,உண்மையை மீட்க வந்த கரம், அறம்.
சுயநலமான அரசியல் வாதிகள்,அதிகாரிகளின் முகத்திரையை கிழித்திடும் கூர்வாள்.
சமூக நலன் இல்லாத இலக்கியம் இருந்தால் என்ன? அழிந்தால் என்ன?
அறம் இந்தியாவின் உண்மை முகத்தை, உலகுக்கு பறை சாற்றும் ஆதிப் பறை.
மக்களுக்கு எதுவும் தெரிந்துவிடக்கூடாதென்றே சாராயம் மட்டுமே தெரியவைக்கும் கொடுமையை தகர்க்கும் சாட்டை.
மக்களுக்கான அரசு முதலாளித்துவ அரசாக மாறிவிட்ட நிலையில் தங்களைத்தாங்களே வழிநடத்திக் கொள்ள நிமிரும் உன்னதம்.
கரிசல் காட்டு காவியம்.
சிறந்த கதையமைப்பால், ஆகச் சிறந்த இயக்கத்தால், மதிவதனியின் மட்டுமல்ல படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அதில் வாழ்ந்துள்ளனர்.
படம் பார்க்கும் முன் இருந்த மனதை தூக்கி எறிந்து,படம் முடியும் போது அனைவரையும் படத்தில் வாழ வைத்த இயக்குநரை என்ன சொல்லி பாராட்டுவது.
இத்தனை அழகாய் கருமையான முகங்களை காட்ட இந்தப்பட ஒளிப்பதிவாளரால் தான் முடியும்.
விண்தொடும் அறிவியலின் தோல்வியில்
புறக்கணிக்கப்பட்ட மக்களின் வெற்றி உள்ளது என்பதை உலகுக்கு உரைக்கட்டும்.
ஒவ்வொரு வினாடியும் வாழ்ந்த உணர்வு.
அகனிக்குஞ்சை மனக்காட்டில் விதைத்துள்ள 'அறம்'திரைப்படக்குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..


6 comments :

  1. படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்
    அவசியம் பார்ப்பேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. அரிய முயற்சியைக் கொண்டு துணிச்சலாக களம் இறங்கியோரைப் பாராடடிய விதம் அருமை.

    ReplyDelete
  3. நல்லதொரு பகிர்வு. படம் பார்க்கும் வசதி இங்கே இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு திரையரங்குகளில் இப்படியான படங்கள் வெளியிடப்படுவதில்லை.

    தமிழகம் வரும்போது பார்த்தால் தான் உண்டு.

    ReplyDelete
  4. //...ஒரு பெண்ணை அறிவுடைய வராக,தன்னம்பிக்கை மிக்கவராக,ஆளுமைத்திறனுடையவராக,துணிச்சல் மிக்கவராக,சுயம் உடையவராக, சுயமரியாதை உடையவராக,எளியவராக,மக்களுக்காக போராடுபவராக,சமூக அக்கறை உடையவராக,அதிகாரத்திற்கு அஞ்சாத வராக........//

    ஒரு எம் எல் ஏ மிரட்டினாலென்பதால் தன் இ ஆ ப பணியைவிட்டு விலகுவதாகச் சொல்லும் ஒரு பெண் எப்படி தன்னம்பிக்கை மிக்கவ்ராக, அதிகாரத்திற்கு அஞ்சாதவராக இருக்க முடியும்?

    சஹாயத்துக்கு வராத மிரட்டல்களாக, நேரடியாகவும் மறைமுகவாகவும், அரசியல்வாதிகளிடமிருந்து, மதிவதனிக்கு வந்தன‌? சஹாயம் என்ன விலகிவிட்டாரா? மாவட்ட ஆட்சிப்பணி மட்டும்தான் தொண்டாற்ற முடிகின்ற பதவியா? திருவள்ளூரிலிருந்து தூக்கி திருனெல்வேலிக்குத்தான் போடுவார்கள். அங்கு தொடரலாமே? அல்லது மாவட்ட ஆட்சிப்பணியிலிருந்து எடுத்துவிட்டு வேறுபதவிக்குப் போனால் தொண்டாற்ற முடியாதா? சஹாயம் செய்யவில்லையா? தமிழ்நாடு கோஆப்டெக்ஸ்சில் ஊழல்களைக் கண்டிபிடித்தாரே? அதன் விற்பனையைப் பெருக்கினாரே? அவை தொண்டில்லையா?

    சரி விலகிவிட்டார். அரசியலிலிலோ, தன்னார்வ தொண்டு நிருவனத்தில் வழியாகத்தானே தொண்டாற்ற போவார்? அங்கு இவர் நினைத்ததை மிரட்டல்கள் வாங்காமல் செய்ய் முடியுமா?

    நன்றாக உருவகப்படுத்திய பெண் பாத்திரத்தை விலகல் என்று காட்டி சொதப்பி விட்டார் இயக்குனர்

    ReplyDelete
  5. தமிழகத்தின் முக்கிய பிரச்சனையான நீர் பிரச்சனை, காவிரி நதி நீர் பிரச்சனைக்காக சினிமா நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் தோழர் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்று செய்திகளில் அறிந்து கொண்டேன்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...