Friday 4 August 2017

தயாரா சென்னை

சென்னை நலமா
செல்லமாய் மென்மையாய் கேட்க
 பறக்கின்ற நகர்வில்
ஒரு நிமிடம் அது வார்தாவின் நினைவில்
ஓலமிட்ட அவலத்தை
உயிர் பறித்த உடலாக
உறைந்து உறைந்தது.

தயாரா சென்னை ...?
ஆட்டோ ஓட்டுநர்
ஆர்வமாய் தயாரென்க...

பாலத்தில் தொங்கியத் துயில்

அம்மாயியின் நடுக்கத்தையோ
அலறி இழுத்து சென்ற
அம்மாவின் கதறலையோ..
பிறந்து கண் விழிக்காமல்
மிதந்து மறைந்த மழலையின்
அழுகையையோ.......
எதை உறைத்து
படபடத்தது.....

3 comments:

  1. அப்போது வெள்ளம்! கடலில் கலந்தது உயிர்களோடு!

    இப்போது குடிப்பதற்குக் கூட வெள்ளமே (தண்ணீர்) இல்லை உயிர் வாழ்வதற்கு அடிப்படையானது...

    கீதா

    ReplyDelete
  2. சென்னை - நினைவுகள் சொல்லும் கவிதை.

    சென்னையில் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்று சேர்கிறீர்கள் போலும்.... வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. சென்ற வருட நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன . கவிதையின் செய்தி அழகு நாம்தான் தயாராக இருக்க வேண்டும்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...