Saturday 29 April 2017

மனதை நிறைத்த காட்சி..

மனதை நிறைத்த காட்சி ..

புதுகை -தஞ்சை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...

,கருத்து நீண்டிருந்த தார்ச்சாலையின் இருபக்கங்களிலும் மரப்போத்துகள் பாதுகாப்பாக நடப்பட்டுள்ளதைக் கண்ட போது..மனம் நிறைவாக இருந்தது ....இதுவரை நான் பயணித்துள்ள சாலைகளிலெல்லாம் மரங்களின் மரண ஓசையோடும்,மனம் நிறைய வேதனையோடும் வெறுமை சூழ ...கண்ட நிலையை மறக்கச்செய்தது புதுகை -தஞ்சை பயணச்சாலை ....

இன்னும் சில வருடங்களில் அவை நெடுமரங்களாக வளர்ந்து பசுமைப்பாதையாக நிழல்தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதற்கு காரணமான நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

இதை ஏன் மற்ற சாலைகளில் பயன் படுத்த கூடாது ..?
சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் தான் அழித்த மரங்களுக்கு பதிலாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று யார் உத்தரவிட வேண்டும் ...?

மரங்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது நம் கடமை அல்லவா?

அருகில் அமர்ந்து இருந்த அம்மா பேருந்தில் இரண்டு டிக்கெட் எடுத்தார் ..ஒருவர் மட்டும் தானே இருக்கின்றார் என்று இன்னொருவர் எங்கே அம்மா ?என்றேன் ...பின்னாடி என்மவ உட்கார்ந்துருக்காம்மான்னு சொன்னார். அப்படியா என்ன பண்றாங்க? ..வல்லம் கல்லூரியில் படிக்கிறாங்கம்மா..என்றார் .இங்கு தான் இடமிருக்கே ஏன் தனியா உட்காருந்துருக்காங்க?


நான் வெள்ளரிக்காய் கூடையோட இப்படி புடவைக்கட்டிக்கிட்டு இருக்கேன்ல அதனால எங்கூட உட்கார வெட்கப்பட்டுக்கிட்டு அங்கன போய் உட்கார்ந்துருக்காமான்னு பாவம் படிக்கிற புள்ளைக்கு சங்கடமா இருக்கும்ல அதான்னு சொன்ன போது...

இப்படிப்பட்ட அம்மாக்களால் தான் உலகம் உய்கிறது ..என்று தோன்றியது ..நாசமா போன கல்வி அம்மாவையும் அவமானப்பொருளாக்கியக் கொடுமை... ..

4 comments:

  1. பிள்ளைகள கல்வியில் உயரும்போது, பெற்றவர்கள் தாழ்ந்துபோகிறார்கள் என்பதே நிதர்சனம். என்ன செய்வது, பெற்றவர்கள் பொறுத்துக்கொண்டுதான் இருக்கவேண்டியிருக்கிறது. கற்றதனால் ஆய பயன் என்கொல்?

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  2. //நாசமா போன கல்வி அம்மாவையும் அவமானப்பொருளாக்கியக் கொடுமை... ..//

    எப்படி எல்லாம் இருக்கிறது இந்தத் தலைமுறை....

    ReplyDelete
  3. வேதனைப்படவேண்டிய நிலையில் உள்ளோம். என்ன செய்வது?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...