கவிஞர் தங்கம் மூர்த்திஅவர்களின் "தேவதைகளால் தேடப்படுவன் "நூல் திருமிகு பாரதிகிருஷ்ணகுமார் அவர்களால் அண்மையில் வெளியிடப்பட்டது ....
புதுகை மக்களின் அன்பில் நிறைந்த கவிஞரின் நூலின் தலைப்பே அவரின் தன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது மிகச்சிறப்பு ..
குளிர் இளந்தென்றலின் மணமும்,மென்மையும் .....நம்மை பரவசப்படுத்துவது போல ...மழையில் நனைந்த பூக்களின் தலையாட்டலாக ,மல்லிகையாய் மனம் முகிழ்க்கும் கவிதைகள் .....
"குளிர்ந்த ஒளி
மழையெனப் பொழிந்து
என்னை முழுவதும்
நனைத்திருந்தது
அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள் "
நிலா பூக்கும் அதிசயம் இவருக்கு தான் தோன்றும் ...
சொற்கள் இவருடன் விளையாடுகின்றதா ,இவர் சொற்களோடு விளையாடுகின்றாரா என மதி மயங்கும் தருணமாய்
"சூடேற்றும் தருணத்திற்காக
தவமிருக்கின்றன
எல்லா சொற்களும் "
தன்னை உணர்ந்தவராக இவரை, கவிதைகள் அனைத்தும்...அடையாளம் காட்டுகின்றன ...நண்பர்களைப்பற்றி அறிந்து கொண்டே அவர்களோடு இயல்பாய் பழக இவரால் மட்டுமே சாத்தியம் ..ஏனெனில் தேவதைகளால் தேடப்படுவரல்லவா ?!அதனாலேயே அனைவராலும் ஆராதிக்கப்படுவராகவும் ,எதிரிகளையும் ஈர்க்கும் வல்லமையாளராக....பரிணமிக்கின்றார் ...
திருவிழாவைநேசிக்கும் குழந்தைகள் கனவில் உறைந்த திருவிழா நம்மை பால்யத்திற்குள் வீழ்த்துவதை தடுக்க முடியவில்லை .நிறமற்ற கனவுகளும்,நிறமற்ற வாழ்க்கையும், நிராசைகளைத் தாங்கி, எதையும் ஏற்று வெற்றி வாகை சூடும் கவிஞராக ....திகழ்கின்றார் .
"நாய்கள் ,நடைப்பயிற்சி "குறித்த கவிதைகள் அவைகளுக்காக எழுதப்பட்டது இல்லை ....என்பது உண்மை .
புன்னைகையால் வார்த்தை பாலத்தை திறக்க அழைக்கும் காதல் ...மண்ணை மணக்கும் வைக்கும் மழைப் பாலமாக .....
நண்பர்களையும்,நண்பர்களைப்போன்ற எதிரிகளையும் கையாளுவது, கயிற்றின் மேல் நடக்கும் சிறுமியின் லாவகத்தில் ..இருவேறு சிரிப்புகளை வகைப்படுத்தும் தன்மை அருமை .மாறுவேடப்போட்டியின் மறுபக்கம் காணும் மனித நேயமிக்க கவிதைகள் மனதை தொடுகின்றன .
இவரது கவிதைகள், வானவில்லாக கண்ணில் பட்ட பொருள்களை எல்லாம் கவிதைவண்ணம் தீட்டி மகிழ்வதை காட்டுகின்றன ...
குழந்தைகளை நேசிக்கும் குழந்தைமையாளராக ,சமூக அக்கறை நிறைந்தவராக ,பள்ளியின் முதல்வராக ,மனித நேயமிக்கவராக ,புத்தனைப்போல் அனைத்தையும் சம நிலையுடன் ஏற்கும் பக்குவமுள்ளவராக வாழ்கின்றவரை தேவதைகள் தேடாமல் இருக்குமா ?
தேவதைகள் சூழ மேலும் பல நூல்கள் படைக்க மனம் நிறைய வாழ்த்துகின்றேன் ...

விமர்சனம் நூலை படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது பகிர்வுக்கு நன்றி
ReplyDeletethalaipai paarthathum padika aavali thoondukerathu. vaalthukal. freetamilmp3.in/load/A%20to%20Z%20Tamil%20Mp3/K/Kodambakkam/Ragasiyamana%20Kadhal.mp3
ReplyDeleteநல்லதொரு அறிமுகம். நன்றி.
ReplyDelete....தங்கம் மூர்த்தி அழகானவர். அத்துடன் அற்புதமான கவிஞர். அவரைத் தேடிக்கொண்டு தேவதைகள் வருவதில் வியப்பென்ன? அப்படி வந்த தேவதைகளை அவர் எப்படிப் பயன்படுத்தினார் என்பதை அடுத்த கவிதைநூலில் காணலாமா?
ReplyDelete- இராய செல்லப்பா. நியூஜெர்சி
பூக்கும் நிலாவா? கற்பனை நன்றாக இருக்கிறது . இன்னும் பல படைத்திட வாழ்த்துக்கள்
ReplyDelete