எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு?
இப்படி உரிமையாய் பேசும் உறவுகளைத் தந்த முகநூலிற்கு எனது மனம் நிறைந்த நன்றி...
பேலியோ டயட்டிற்காக....நமது உள் உறுப்புகளின் காயத்தை சரி செய்ய பசுமஞ்சள் கொழுப்பு உணவுக்குபின் சாப்பிட வேண்டும்...அதனுடன் ஒரு சின்ன வெங்காயம்,எட்டு மிளகு,மூன்று துளசி இலை சேர்த்து சாப்பிடுவதற்கு பசு மஞ்சள் வைத்தியம் என்று பெயர்..
இதற்காக சேலத்தில் இயற்கை விவசாயத்திற்காகவே வாழ்கின்ற முகநூல் சகோதரியான @ Aaranya Alliஅவர்களிடம் பேசிய பொழுது ஒரு விவசாயி மகளாக,பூமியின் மீது அவர் கொண்டுள்ள அக்கறை மனதை நெகிழ வைத்தது.. இயற்கையாக வேளாண்மை செய்யும் எண்ணம் வந்த தருணத்தை அவர்கள் கூறிய போழுது எத்தனை பொறுப்பற்று வாழ்கின்றோம் எனத் தோன்றியது..
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இவரது மூன்று வயது மகன், வயலுக்கு உரமிட்ட கருவி கழுவி வைத்திருந்த ஈரமண்ணில் விளையாடிக்கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்திருக்கிறான்...காரணத்தை கண்டறியும் பொழுது உரக்கருவியினால் ஈரமண்ணில் விடம் பாய்ந்துள்ளதை அறிந்த கணத்தில் இவரது உறவினர்கள் அனைவரும் இனி இப்படிப்பட்ட நஞ்சை நிலத்திற்கு போடக்கூடாதென முடிவு எடுத்து இயற்கை விவசாயத்தை கடை பிடித்து வருகின்றனர்..
நீங்களே உங்கள் வீட்டில் காய்கறி போட்டுக்கொள்ளலாம் என்ற பொழுது தான் ,நான் புத்திசாலி போல செய்யனும்மா எனக்கு கிரீன் கவர் போடத்தெரியாது எவ்வளவு செலவாகும் எனக்கேட்டதற்கு தான் ... அடி வெளுத்திடுவேன்..எந்த மரம் குடை பிடிச்சிட்டுருக்கு ? என்ற கூறிய உடன்...அட ஆமாம்ல....அப்றம் ஏன்மா ஷீட் போடுறாங்கன்னு கேட்ட பொழுது...
காசுக்காகத்தான்மா அப்படி சொல்லி சம்பாதிக்கிறாங்க.... பாலிதீன் ஷீட்டுக்குள்ள உங்காளால எவ்வளவு நேரம் நிக்க முடியும்...முடியாதுல்ல..செடிய மட்டும் அதுக்குள்ள வச்சி ஏன் கொடுமை படுத்துறீங்கன்னு பொட்டில் அடித்த மாதிரி கேட்டார்கள்...
நீங்களே உங்களுக்கு வேண்டிய காய்கறியை உற்பத்தி செய்யலாம் செலவின்றி என்றார்..அப்படி ஒவ்வொரு வீட்டிலும் செய்தால் பூமிக்கே பச்சை போர்வை போர்த்துன மாதிரி இருக்கும்ல..என்று கூறிய .போது ஆஹான்னு இருந்துச்சு..
ஆத்தி ஒரு மண்ணும் தெரியாம வாழ்கிறோமேன்னு இருந்துச்சு.
அடுத்து உங்க மண்ணுல [நெடுவாசல்] போட்டாங்க..அது சீக்கிரம் எங்களுக்கும் பிரச்சனையாகும்மா... இந்தியா மக்களுக்கான நாடாக இல்லை...ஒரு 120 பேருக்காக மட்டும் தான் இது இருக்கு அவங்க வாழ்ந்தா போதும்னு நினைக்கிறாங்க..என்றார்..
உண்மைதான் நிலத்தையும் நீரையும் விடமாக்கிட்டு எங்க வாழப்போறோம்னு தெரியல...நாமாவது வாழ்ந்துட்டோம்.. சுத்தமான காற்றை சுவாசிச்சி ..ஆனா நம்ம குழந்தைகள் எப்படி வாழப்போறாங்கன்னு தெரியலம்மான்னு கவலைப்பட்டேன்...
அதுக்கு அவர், நான் பார்க்கிறவர்களிடம் கல்யாணம் பண்ணிக்காதீங்க..அப்படி பண்ணாலும் குழந்தை பெத்துக்காதீங்க...அப்படி பெத்து அந்தக்குழந்தையை கொடுமைக்கு உள்ளாக்காதீங்க அதுக்கு உங்களுக்கு உரிமை இல்லைன்னு சொல்றேன்மா..
கண்ணுக்கு முன்னாடி இயற்கை சீரழிவதை பார்த்து கொண்டு பேசாமல் இருப்பவர்கள்...வருங்கால சந்ததிக்கு சுத்தமான நீரை,நிலத்தை ,காற்றை கொடுக்க முடியாதவர்கள் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்னு கேட்ட போது...
எது முக்கியமோ அதை விட்டுட்டோம்னு தோன்றியது.. பேசிய சில மணித்துளிகளில் அவர் நிலத்தின் மீது வைத்துள்ள பேரக்கறையை உணர்ந்து கொள்ள முடிந்தது...
விவசாயிக்கு மட்டும்தான் நிலத்தின் மீது அக்கறை இருக்கனும்னு இருந்தால் விரைவில் நம் சந்ததிகள் வாழ வழியின்றி அழிய நேரிடும்...
விழிக்க வேண்டிய கால கட்டம்...அனைவரும் இயற்கை விவசாயத்தை ஆதரித்தாலே நிலை மாறும்...என்ன செய்யப்போகின்றோம்? அவரிடம் கொஞ்ச நேரம் பேசினாலே நாம் இயற்கையை நேசிக்கத்துவங்கிடுவோம்...
அவரை தொடர்பு கொள்ள 9600800221. . தமிழகமெங்கும் இயற்கை விவசாயம் செய்யும் முறையை பரப்புவதையே நோக்கமாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றார்..
மனம் நிறைந்த மகிழ்ச்சி அவருடன் பேசியதில்... வாழ்த்துகள் சகோதரி..

போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteஉண்மை அண்ணா...
Delete....நல்லது செய்வதை விடவும் நல்லது செய்பவர களை அறிமுகப் படுத்துவது மேலான செயல். வாழ்த்துக்கள்.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சி
மனம் நிறைந்த நன்றி சார்...
Deleteநெடு வாசலை விட கொடு(ம்) வாசல். பால் ஆறு பாய்ந்த தெங்கள் மாநிலம் நம் விவசாயிகளை சொந்த மண்ணில் அகதியாய் திரிய செய்தது தான். நம் அரசியலா ரின் அரை நூற்றாண்டு பகுத் 'அறிவு' சாதனை.
ReplyDeleteஉண்மை..இது தான் அறிவா?எதை தேடி ஓடுகின்றோம்னு புரியாமலே வாழ்க்கை ஓடுகின்றது....நன்றி ..
Deleteவாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteமிக்க நன்றி சகோ...
Deleteமிகவும் பயனுள்ள பசுமையான விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி சார்..
Deleteவணக்கம் !
ReplyDeleteமண்ணுமோர் யாழ்தான் இங்கே
....மகிழ்வுடன் வாசித் திட்டால்
நண்ணுமோர் வாழ்க்கை தன்னில்
....நலம்பல சேர்க்கும் ! எங்கும்
கண்ணுமோர் எழிலைக் கொஞ்சும்
....கவிதையாய் பயிர்கள் காய்க்கும்
உண்ணுமோர் பொழுதென் றாலும்
....உயிர்நிறைந் தோங்கு மன்றோ !
நல்லோரைக் காண்பதுவும் நன்றே........
சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள்
தோழமையுடன் என்றும் இவன் ........
மனம் நிறைந்த அன்பும் நன்றியும்.....சார்.
Delete"கண்ணுக்கு முன்னாடி இயற்கை சீரழிவதை பார்த்து கொண்டு பேசாமல் இருப்பவர்கள்...வருங்கால சந்ததிக்கு சுத்தமான நீரை,நிலத்தை ,காற்றை கொடுக்க முடியாதவர்கள் எதற்கு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்னு கேட்ட போது..." என்ற வரிகள் உறைப்பாக ஒரு செய்தியைச் சொல்கிறதே!
ReplyDeleteஆமாம் சகோ...மறுக்க முடியாத சாட்டையடி...
Deleteநல்லது செய்பவரின் தோளை தட்டி உற்சாகப்படுத்துவது அவரை மேலும் பல நல்லது செய்ய ஊக்குவிக்கும் ஆனால் அவர்கள் தட்டிக் கொடுக்கும் அருகாமையில் இல்லை என்ற போது இப்படி பலரும் அறிய அறிமுகப்படுத்துவதும் அவர்களை உற்சாகமளிக்கும். அதை புரிந்து செயல்படும் உங்களுக்கு அவருக்கும் எனது பாராட்டுக்கள்
ReplyDeleteமனம் நிறைந்த அன்பும் நன்றியும் சார்..தொடர்ச்சியான உங்களின் வருகையும்,,வாழ்த்துகளும்..தரமான பதிவுகளைத்தர தூண்டுகோலாக அமைகின்றன...நன்றி..
Deleteஅருமையான மனுஷி.. செயல்களாலும் சிந்தனைகளாலும் எல்லோருக்கும் நல்லொதொரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். அவரைப் பற்றிய கூடுதல் தகவல்பகிர்வுக்கு நன்றி தோழி.
ReplyDelete