World Tamil Blog Aggregator Thendral: நானும் பேலியோவும்.

Sunday 29 January 2017

நானும் பேலியோவும்.

நானும் பேலியோவும்

கடந்த 7 வருடங்களாக…தைராய்டு நோயால் உடலெடை அதிகரித்து எப்போதும் சோம்பலுடன் ,தூக்கமும் நானும் இணை பிரியாதவர்களாய் இடம் கிடைத்தால் படுத்துகொள்ளவேண்டும் என்றே தோன்றும்
விளைவு எடை கூடிக்கொண்டே போக..

எடை குறைக்க யோகா வகுப்பிற்கு சிலநாள்,ஜிம் கிளாஸிற்கு சிலநாள்,இப்படியான எனது எடைக் குறைப்பு முயற்சியில்…

காலை முழுதும் உணவைத் தவிர்த்து…சிறுதானியங்கள் சேர்த்து என பல வழிகளில் அதனுடன் போராட…வெற்றி என்னவோ உடல் எடைக்கே கிடைத்தது…


அதிகமான உடல் எடை 82 கிலோவிற்கு வந்து மூச்சு விடவே சிரமம்…
இனி எடைக்குறைப்பு என்பது நம்மால் முடியாது என்று நம்பிக்கை இழந்த காலத்தில் தம்பி வி.சி.வில்வம் பேலியோடயட் பற்றி கூறியபோது முதலில் சற்று அச்சம் நம்மால் கடை பிடிக்க முடியுமா?என்ற சந்தேகத்தில்


ஒரு வாரம் பேலியோடயட் புத்தகத்தை படிப்பதும், யூ டுயூபில் திருமிகு .நியாண்டர் செல்வம் ,திருமிகு.மனோஜ்,திருமிகு சங்கர்ஜி ஆகியோரின் பேச்சை தொடர்ந்து கேட்டு எனது மனதை தயார் படுத்திக்கொண்டு அக்டோபர் மாதம் 10 தேதி துவங்கினேன்.

முதல் மாதம் சரசரவென 4 கிலோ குறைய…மனம் முழுதும் பேலியோவை வாழ்த்திக்கொண்டே இருக்க…100 நாள் கடந்து பின் 7கிலோ குறைந்து எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது..

எடை கூடியிருக்கும் போது குதிகால் வலி,மூட்டு வலி துவங்கியிருந்தது இப்போது போயே போச்..
தூங்கிக்கொண்டே இருந்த நான் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பதை உணர்கின்றேன்.

தைராய்டு பிரச்சனை குறைந்து வருகின்றது.
ஆரம்பத்தில் என்னுடன் பணி புரியும் சக ஆசிரியர்கள் ,என்னைப்பார்த்து அச்சப்பட்ட நிலை[கொழுப்பா திங்கிறாளே என்ன ஆகப்போறாளோன்னு] மாறி அவர்களும் பேலியோவில் இணைந்து வரத்துவங்கியுள்ளனர்.

இப்போது என் முன் யாராவது உடல் எடை அதிகமானவர்களைக்கண்டால் என்னையும் மீறி நான் பேலியோவைப்பற்றி பேசத்துவங்கி விடுகின்றேன்…

ஆரோக்கியமான இவ்வுணவைப்பற்றி என்னை சுற்றியுள்ளவர்களிடம் கூற ,புரிதலுடன் மாறி வருகின்றனர்.10 பேருக்கு மேல் இரத்த பரிசோதனை எடுத்து பேலியோவைத்தொடர்கின்றனர்

ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டிய திருமிகு நியாண்டர் செல்வன் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி…

அவர் வழியில் பயணித்து தங்களது சேவையால் பேலியோவை உலகறியச்செய்து கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.







14 comments :

  1. Replies
    1. மிக்க நன்ரி சகோ..

      Delete
  2. //இப்போது என் முன் யாராவது உடல் எடை அதிகமானவர்களைக்கண்டால் என்னையும் மீறி நான் பேலியோவைப்பற்றி பேசத்துவங்கி விடுகின்றேன்…//

    ஆஹா தாங்கள் சொல்லும் ஓவர் வெயிட் + முட்டிவலி போன்ற அத்தனை பிரச்சனைகளுடனும் நானும் இருக்கிறேன். 6 அடி உயரம், 96/97 கிலோ வெயிட். ஆலோசனை கேட்க, உங்கள் முன் என்னால் தோன்ற முடியாமல் உள்ளது. ஏற்கனவே எனக்கு ஷுகர் ப்ராப்ளமும் உள்ளது. எனினும் அது மருந்து மாத்திரைகளால் ஓரளவு கண்ட்ரோலில் உள்ளது. அதனால் தாங்கள் சொல்ல நினைப்பதை இங்கு பதிவிலேயே விரிவாகச் சொன்னால் என்னைப் போன்றவர்களுக்கு ஒருவேளை பயன்படக்கூடியதாக இருக்குமே.

    //ஆரோக்கியமான இவ்வுணவைப்பற்றி என்னை சுற்றியுள்ளவர்களிடம் கூற, புரிதலுடன் மாறி வருகின்றனர்.//

    அந்த ஆரோக்யமான உணவைப்பற்றி இங்கேயே சொல்லுங்கோ. இல்லாவிட்டால் ஓர் தனிப்பதிவாகப் போட்டு அதில் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சார்..நான் முன்பே உங்களிடம் சொல்லியிருக்க வேண்டும்...இது முகநூலில் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு வின் மூலம் திருமிகு நியாண்டர் செல்வன் கோவை அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பேலியோ டயட்..சைவ மற்றும் அசைவ உணவு உண்பவர்களுக்கு என தனித்தனியாக அவர்களே டயட் சார்ட் தருகின்றனர்..தனிப்பதிவாக எழுதுகின்றேன்..அவசியம் இணைந்து நீங்கள் பலன் பெற விழைகின்றேன்...

      Delete
  3. Congrats geetha ..naanum paleo veg diet thaan. .

    ReplyDelete
    Replies
    1. ஆஹா பேலியோ வணக்கம் மா...வாழ்த்துகளும் நன்றியும்..

      Delete
  4. Replies
    1. மிக்கநன்றி சகோ..

      Delete
  5. எல்லோரும் பாராட்டும் இந்த உணவு முறையை பாரம்பரிய அரிசி உணவைத் தவிர்க்கச் சொல்லும் சதியாக நினைத்ததுண்டு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஏஞ்சலின் கூட பேலியோ உணவு முறை...ஓ நீங்களும் வெற்றி கண்டுவிட்டீர்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துகள் கீதா.
    கழுத்து வலி மற்றும் சில காரணங்களுக்காக நானும் முயற்சிக்கிறேன். நன்றி கீதா.

    ReplyDelete
  8. doubtttuuu....these photos before பேலியோடயட் or after .....

    ReplyDelete
  9. போலியோ என்று நினைத்தது தவறு.....!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...