Wednesday 18 January 2017

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்
----------------------------------------------------------

வெட்கமாக உள்ளது....

பிள்ளைகளை பனியில் வாடவிட்டு கொடுமை படுத்தும் அரசு...

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மக்களின் நியாயமான கோரிக்கையை புறக்கணித்து அதிகாரத்திமிரில், ஆணவத்தோடு ,அமைதியாய் போராடும் பிள்ளைகளை அடித்து நொறுக்குகின்றது..

வீட்டில் உறங்கவும்,உண்ணவும் முடியவில்லை...இது தமிழனுக்கு நடக்கும் போராட்டமா?அல்லது இந்தியாவிற்கும் பீட்டாவிற்கும் நடக்கும் போராட்டமா?

யாருக்கு பயந்து அமைதிகாக்கிறது...அரசு...

அக்னிக்குஞ்சுகள் தெருவில் இறங்கியுள்ளது என்பதை இன்னும் உணராமல் அலட்சியப்படுத்துவது அநீதியானது...

இப்போது பணிந்தால் பின் தமிழகத்திற்கு இழைக்கும் கொடுமைகளுக்கெல்லாம் போராட ஆரம்பித்துவிடுவார்கள், ஆட்சி செய்ய முடியாதே என்ற அச்சமும் ,இதற்கு பணியக்கூடாதென்ற வீம்பும் நம் பிள்ளைகளை போராட விட்டு வேடிக்கை பார்க்கிறது..

என்ன செய்ய முடியும் இவர்களால் என்ற அலட்சியம்..

வியப்பாக உள்ளது அவர்களின் அமைதி....போராட்ட குறிக்கோளை தெளிவாக தெரிவித்து எந்தவித வன்முறையும் இன்றி...போராடும் தன்மையை எங்கிருந்து கற்றார்கள்...

தமிழனுக்காக தானே அரசு...அவர்களின் உரிமையை மீட்டெடுக்க முடியாமல் எதற்கு ஆட்சியில் அமர வேண்டும்..

அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்...இந்த பண்பை...

பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் இந்த அரிய பண்பை...

நள்ளிரவில் பெண்கள் இத்தனை ஆண்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியவில்லை...

இங்கு சாதி இல்லை,மதம் இல்லை,ஆண் பெண் பால் பாகுபாடு இல்லை..

எல்லோருக்கும் ஒரே குறிக்கோள்...
தமிழரின் உரிமை...ஒன்றே

வேடிக்கை பார்க்கும் நாமும் இணைய வேண்டும்...

8 comments:

  1. கண்டிப்பாக வெற்றி பெறுவோம் .

    ReplyDelete
  2. இளைஞர்கள் எழுச்சி! எதிர்ப்பாளர்களை வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete
  3. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
    தீர்வு கிட்டும் வரை
    எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

    காலம் பதில் சொல்லுமே!

    ReplyDelete
  4. நிச்சயமாக வெற்றி பெறுவோம்

    ReplyDelete
  5. அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்....

    உண்மை..உண்மை...

    வெல்லட்டும் உணர்வு போராட்டம்..

    ReplyDelete
  6. வெல்லட்டும் மாணவர்கள்... வெட்கட்டும் அரசியல்வியாதிகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...