அதிகாலையில் ஆசிர்வதிக்கப்பட்டேன்.
எப்பவாவது?~! நடைப்பயிற்சிக்காக புதுக்குளம் செல்வேன்..வீட்டிலிருந்து வண்டியில் சென்று பின் அங்கிருந்து நடைப்பாதையில் நடப்பதுண்டு.
முகத்தில் அறையும் பனியை முழுமையாக வாங்கிக்கொள்வதில் வரும் மகிழ்வு வேறு எதிலும் கிடைக்காது.மெல்ல விடியும் பகல் அத்தனை அழகாக நம்மை வரவேற்கும்..
குளிர்ந்த நீரிலிருந்து வீசும் மென்பனிக்காற்று அடடா.
எனக்கு பிடித்த வேப்பமரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து இலவசமாக தூய்மையான ஆக்ஸிஜனை சுமந்து கொள்வேன்.
எப்போதும் ஒரு ஒற்றைநாரை தனக்கான இரைக்காகக் காத்திருக்கும்.அதன் விடாமுயற்சியில் இரையோடு பறப்பதைக்காண்கையில்...என்ன சொல்வது இயற்கை அதிசயம்..தான்
அப்படி இன்று அதிகாலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட சில நிமிடத்தில் ஒரு பெரியவர் நடப்பதைப்பார்த்து அய்யா வர்றீங்களா என்று கேட்டேன்..உடனே வரேன்மா என்று ஏறினார்.எங்க போகனும்ங்க என்றதற்கு சர்சுக்கு போறேன்மா..என்றார்.
போகும் வழியில் தான் சர்ச் உள்ளதால் அங்கேயே இறக்கி விட்டேன்..
இறங்கியதும் அவர் கூறியது
”கடவுளே வந்து உதவி செய்துள்ளார்மா” என்று ஆசிர்வதித்து இறங்கிச்சென்றார்.எங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் அவரின் வாழ்த்து இன்றைய நாளை மகிழ்வாகத்துவங்கி வைத்துள்ளது.
செய்வோம் சின்னச்சின்ன உதவிகளை...நமது நாள் மகிழ்வாக..
இன்றைய நாள் என்ன
ReplyDeleteநல்லோருக்கு
வாழ்வே மகிழ்வுதான்
வணக்கம் அண்ணா...மிக்க நன்றி.
Deleteஉண்மை இதன் பலனாய் இன்றைய பொழுது மகிழ்ச்சியான நாள்தானே....
ReplyDeleteமௌண்ட் ஜோனில்....