புதுக்கோட்டை கலக்குகின்றது..
புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆளுமையான பேச்சாளர்கள் செவிக்கு விருந்து படைத்து வருகின்றனர்..
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளால் கண்களுக்கு விருந்து படைக்கின்றன்ர்.
முதல்நாளில் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்கள் தனது நிதானமான...பேச்சால் கதைகள் பிறந்த கதையைக்கூறி மக்களை தனது பேச்சால் கட்டிப்போட்டார்.
மூன்றாம் நாளான இன்று புதுகை பூபாலன் குழுவினர்..நமது மூடநம்பிக்கைகளை,முட்டாள் தனங்களை நகைச்சுவையாக சிந்திக்கும் படி நமது அறிவீனத்தை சுட்டிக்காட்டியது மிக அருமை..
பெரியாரை போற்றி,பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கிண்டலடிக்காமல்,..அவர்களுக்கு படிக்க நேரம் கொடுங்கன்னு பேசி அவர்களுக்கு மதிப்பளித்தது பாரட்டுதற்குரியது..
பெண்கள் போகப்பொருளாக ,மட்டம் தட்டக்கூடிய பொருளாக,மதிப்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் இப்படியும் பேச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது..வாழ்த்துகள் பூபாலன் சார்.
ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை அள்ளிச்செல்கின்றனர்...
இவ்விழாவைச்சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்
புத்தகத் திருவிழா மிகச் சிறப்பாக நடந்து வருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் சாதனைகள்...
ReplyDeleteஅருமை...
ReplyDeleteதிருவிழாப் பகிர்வுகள் அருமை. வாய்ப்பிருப்பின் ஞாயிறன்று வரவுள்ளேன்.
ReplyDelete