Sunday 20 November 2016

தமிழ்த்திரு குருநாதசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி.20.11.16


தமிழ்த்திரு குருநாதசுந்தரம்  படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி.20.11.16

இறுக்கமான ,கனத்த இதயங்களைத்தாங்கி புதுகை நகர்மன்றம் இப்படி ஒருநாளும் தன் வரலாற்றில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை..

நல்ல மனிதராய்,
நல்ல ஆசிரியராய்,
நல்ல ஆசிரியப்பயிற்சியாளராய்,
மனிதநேயமிக்கவராய்,
பணிவுடன் கூடிய பேரறிவு மிக்கவராய்,
மாணவர்கள் போற்றும் ஆசிரியராய்,
புதுகை தமிழக தமிழாசிரியர்கழகத்தின் மாவட்ட செயலாளராய்,
புதுகையில் தமிழாசிரியர்கள் கணினி அறிவு பெறக்காரணமாய் இருந்தவராய்,
தமிழ்நாட்டின் டி.என் .பி சி வினாத்தாள் தயாரிப்பாளராய்,

தூயத்தமிழ் கவிஞராய்,சிறுகதையாசிரியராய்,கட்டுரையாளராய்,

வீதி கலை இலக்கியக்களம் உருவாக வித்திட்டவர்களில் ஒருவராய் ,

இன்னும் பல திறமைகள் இருந்த போதும் ,ஆர்ப்பாட்டமில்லா எளிமையுடையவராய் வாழ்ந்து ,குறுகிய காலத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்து பாரதியைப்போல், தனது வாழ்வை முடித்துக்கொண்ட திருமிகு குருநாதசுந்தரம் அய்யாவின் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது..

கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு நா.அருள் முருகன் அவர்களும்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு சாந்தி அவர்களும்,
புதுக்கோட்டை,தேவக்கோட்டை ,சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர்களும்,

தமிழகத்தமிழாசிரியர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும்,
கல்வியாளர்கள்,ஆசிரியர்கள்,மருத்துவர்கள்,பள்ளி முதல்வர்களும்,கவிஞர்களும்,இலக்கிய அமைப்பைச்சேர்ந்தவர்களும் பள்ளிக்குழந்தைகளும் ,கலந்து கொண்டு அவருக்கு கவிதையாகவும் அனுபவ உரையாகவும் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அவரது குடும்பத்தினருக்கு ஆதரவும் பாதுகாப்பும்,தேவையான உதவிகளை செய்வதாக அனைவரும் மனமாரக்கூறினர்.

எல்லோருக்கும் நல்லவராய் ஒருவரால் வாழ முடியும் என்பதைதமிழ்த்திரு குருநாதசுந்தரம் அய்யா அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளதை இன்று நகர்மன்றம் உணர்ந்தது...






 புதுகை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
 வீதி நிறுவனர் முனைவர் நா,அருள்முருகன் அய்யா அவர்கள்
கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்.

No comments:

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...