வீதி கலைஇலக்கியக்களம் -32
இன்று 23.10.16 வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக திருநங்கையர்களுக்கான சிறப்புக்கூட்டமாக நடந்தது.
வரவேற்புரை
ஒளிப்பதிவாளர் செல்வா அவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்க கூட்டம் துவங்கியது .
தலைமை
திருமிகு மீனாட்சி சுந்தரம் அவர்கள் தலைமை வகித்து கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்தி திருநங்கைகள் குறித்த கவிதை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்கள்
சிறப்பு விருந்தினர்களாக பாண்டிச்சேரியிலிருந்து திருமிகு செல்வக்குமாரி அவர்களும்,மதுரையிலிருந்து திருமிகு பிரியாபாபு அவர்களும் கலந்து கொண்டனர்.
உணர்வுபூர்வமான ஒரு விழாவாக அமைந்தது .
பாடல்
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் குழந்தைக்கு சிறப்பு செய்தார்.
”பெண் குழந்தை பிறப்பு”குறித்த பாடலைப்பாடி அனைவர் மனதையும் கலங்க வைத்தார் இராமநாதன் செட்டியார் பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும் குழந்தை ஜமுனா...
”ஆணாகிப்பிறந்து பெண்ணாக வாழும்”என்ற பாடலை பாடி திருநங்கைகளுக்கு அர்ப்பணம் செய்தார் திருமிகு பொன்.க. அய்யா அவர்கள்.
கவிதை ஒலி வடிவமாக
வீதியில் புதிய முயற்சியாக செல்வா & செல்வா ஆகியோரின் முயற்சியில்
மெல்லிய பின்னணி இசையில் சோலச்சி ,செல்வா,மணிகண்டன்,கீதா ஆகியோரின் குரலொலியில் கவிதை பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.வீதியே களைகட்டியது போல இருந்தது.
முகநூல் நண்பர்களின் கவிதை
வீதியில் முகநூல் நண்பர்களும் தங்களது கவிதைகளை திருநங்கைகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக கவிதை வடிவில் கலந்து கொள்ளலாம் என்ற எங்களின் வேண்டுகோளுக்காக கவிதை எழுதி அனுப்பிய ,
முகநூல் உறவுகள்
ஆத்தூரில் வசிக்கும் திருமிகு ராம்மோகன் அண்ணன்,
ஆஸ்திரேலியாவில் வாழும் சகோதரி கீதா மதி,
சென்னை சகோதரி திருமிகு பெருமாள் ஆச்சி,
புதுகை ஆட்டோ சத்யா,
திருச்சியில் வசிக்கும் மதன் கல்யாணசுந்தரம்,
கவிஞர் புதுகை தீ.இர.,ஆகியோரின் கவிதைகள் வீதியில் வாசிக்கப்பட்டு அனைவரது பாராட்டையும் பெற்றன.
கவிதை
நாகநாதன்,பவல்ராஜ்,சிவக்குமார்,இந்துமதி இன்னும் பலர் திருநங்கைகளை மையமாகக்கொண்ட கவிதைகள் வாசித்தனர்.
சிறுகதை
கவிஞர் மு.கீதா திருநங்கைகளின் உண்மையான காதலைப்பற்றிய சிறுகதை எழுதி வாசித்தார்...சிறுகதை அனைவராஉம் விமர்சனம் செய்யப்பட்டது.
சிறுகதை விமர்சனம் செய்தவர்கள்
சிறப்புரை:
முனைவர் திருமிகு செல்வகுமாரி
அரவாணி என்ற சொல்லே மூன்றாம் பாலினத்தினருக்கு அங்கீகாரம் தந்தது.
வாழ்வதற்காக நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்,ஆனால் அவர்கள் வாழ்க்கைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அரவாணிகளின் சிரமங்கள் குறித்தும் மிக விரிவாகப்பேசினார்.மூன்றாம் பாலினம் என்று சொல்லும் போது ஆண் முதலிடம், பெண் இரண்டாமிடம் ,நாங்கள் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற கவலை ஏற்க வேண்டிய ஒன்று.
திருமிகு பிரியாபாபு
முகநூல் நண்பர் ,சமூக சேவகர்,திருநங்கைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் ப்ரியாபாபு அவர்கள் பேசுகையில் வீதிக்கூட்டத்தின் பெருமைகளைக்கூறி, இந்த வீதியில் மனம் ஒன்றி இங்கு நான் பொருந்தி போவதாக உணர்கின்றேன் என்ற போது மகிழ்வாக இருந்தது.
இன்குலாப் எழுதிய ”பிறப்பால் தாழ்ந்திட” என்ற கவிதையுடன் தனது உரையைத் துவங்கினார்.
திருநங்கை என்றால் யார்?என்ற கேள்வியுடன் அவர்களின் தெளிவான உரை ..ஒரு பெண் குழந்தை என்றால் அவள் பெரியவளாவதை அவள் அம்மாவிடம் சொல்லமுடியும்,ஒரு ஆண் குழந்தை என்றால் தனது தோழர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்...ஆனால் ஒரு ஆண் குழந்தை தான் ஒரு பெண்ணாக மாறும் நிலையை யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர்கள் வாழ்வில் பட்ட சிரமங்களையும்,சுற்றங்களால்,ஆசிரியர்கள் இப்படிப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு 45% குழந்தைகள் ஆளாகின்றனர்.
திருநங்கைகளின் காதலை ஒரு ஆண் ஏற்றுக்கொள்ளக் காரணம் தனது பாலிய இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளவே .
எனது தாய்மொழி தமிழ் என்பதை எண்ணி மிகவும் பெருமைப்படுகின்றேன்.ஏனெனில் தமிழ் மொழியில் தான் திருநங்கைகள் குறித்த பதிவுகள் மிக அதிகமாக உள்ளன....
திருநங்கைகளிடம் சாதி என்பதே கிடையாது..சாதி பற்றி பேசினால் அபராதம் கட்ட வேண்டும்.
ஒவ்வொரு திருநங்கையும் தான் பெண்ணாக உலகறிய வாழ வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்தை, சுற்றத்தை,வீட்டை,நண்பர்களை விட்டு பிரிந்து வந்து தனதுஉயிர் போனாலும் பரவாயில்லை என உயிருறுப்பை அறுத்து பெண்ணாக மாறுகின்றாள்..
அவர்களைப்பார்த்தால் நல்லாருக்கீங்களா என ஒரு வார்த்தை மட்டும் கேளுங்கள் போதும் ,வேறு எதுவும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை.
சேர சோழ பாண்டியர் காலங்களில் அரண்மனையில் தான் திருநங்கைகளின் பணி இருந்தது.மிக உயர்வாக மதிக்கப்பட்டனர்.
1860க்கு பிறகு லார்ட் மெக்காலே தனது கட்டுரையில் குற்றப்பரம்பரையினர் பட்டியலில் திருநங்கைகளை இணைத்ததே இந்த இழிநிலைக்கு காரணம்...
தமிழ்நாட்டில் அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பெரியாரிஸமும் ,கம்யூனிசமும்,மார்க்ஸியமுமே காரணம் என்று விரிவான, ஆழமான,சிறப்பான உரையை முடித்த போது திருநங்கைகள் குறித்த தெளிவான பார்வை அனைவரிடமும் உருவாகியிருந்ததை உணர முடிந்தது...
மேலும் வீதி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தக்க பதிலையும் கூறியது அவர்களின் ஆழ்ந்த அறிவை எடுத்துக்காட்டியது.
நன்றியுரை
கவிஞர் செல்வகுமார் அவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைக்கூற கூட்டம் மிகச்சிறப்பாக,அர்த்தமுள்ளதாக அமைந்தது.
பாராட்டுகள்
அமைப்பாளர்களான செல்வா&செல்வா சென்ற முறை வீதிக்கூட்ட அமைப்பாளர்களாக இருந்த போது ”மண்ணுக்கு மரம் பாரமா “பாடல் எழுதிய முத்துச்சாமி பாடலாசிரியரை அழைத்து வந்து அவரை உலகறியச்செய்து அவருக்கு தமிழக அரசின் நிதி உதவி கிடைக்க அவர்களும் ஒரு காரணமாயிருந்தனர்.
இம்மாத கூட்டத்தில் திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப்பற்றிய ஒரு தெளிவான சிந்தனையை அனைவருக்கும் கொடுத்து,அவர்களை பற்றிய கவிதைகளை ஒலி வடிவமாக உலா வரச்செய்துள்ளது மிகவும் பாரட்டுதற்குரிய ஒன்று.
மனம் நிறைந்த வாழ்த்துகளை வீதி அவர்களுக்கு தெரிவித்து மகிழ்கின்றது.

வீதி தனது இலக்கில் சரியாகவே போய்க் கொண்டு இருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று. என்னால் வர இயலாமல் போய் விட்டது குறித்து வருந்துகிறேன்.
ReplyDeleteநன்றி...அருமையான தொகுப்பு...
ReplyDeleteஎமது வாழ்த்துகளும் கூடி...
ReplyDeleteவிழா நிகழ்வினைத் தொகுத்து தந்தவிதம் அருமையாக உள்ளது. இக்காலகட்டத்திற்குத் தேவையான ஒன்றை உணர்வுபூர்வமாக நுணுகி விவாதித்த விதம் நன்று.
ReplyDelete