Tuesday 4 October 2016

பெண்

1980-
உடைகள் மாறின
உலக்கைகள் தடை செய்தன
 வெளியை

நிம்மதியான உறக்கம்
நிகழ மறுத்த காலம்

 இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென
ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன...

அன்று முதல் இன்று வரை
இருகால்களும் கைகளும்
சுதந்திரமிழந்தன...

எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள்
போலவே பழக்கப்படுத்தப்பட்டது..

ஓடியகால்கள் தடுக்கிவிழாமல்
நடக்கவே சிரமப்பட்டன..

வெடிச்சிரிப்பு மத்தாப்பானது..
நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது.

ரேடியோ ஒன்றே உலகு காட்டியது.
ஆண்களிடம் பேசுவதும்
அவர்களைப்பார்ப்பதும்
தீண்டாதவையாகின.

கல்வியைவிட திருமணத்திற்கு
தயாராகவே நாட்கள் கழிந்தன..

2016
உலக்கைகள் முறிந்தன
உடைகள் மாறின

கால்கள் விரித்து ஓடவும் ஆடவும்
தூங்கவும் முடிகின்றது

இருகைகளும் இருப்பை உணர்ந்தன.


எல்லைகள் விரியத்துவங்கி விட்டன
உலகம் ஒருவிரலில் சுருண்டுவிட்டது

திருமணத்தைவிட கல்வி முக்கியமானது

எல்லாம் மாறின..
வெளி இல்லையென்றாலும்
அச்சமின்றி வாழ்ந்த காலமில்லை
இப்போது...

அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..



4 comments:

  1. அருமையாக சொன்னீர்கள் மாற்றத்தை இருப்பினும் முடிவில் சொன்னீர்களே... அதுதான் சாபக்கேடு.

    ReplyDelete
  2. மாறிவிடும் எல்லாமே ஒருநாள் ...
    நம்புவோம்
    தம +

    ReplyDelete
  3. அருமை சகோ!மாற்றங்கள் பல வந்தாலும் பெண்களின் நி பல காலங்கள் ஆகுமோ...

    ReplyDelete
  4. மாற்றங்கள் இன்னும் பல தேவை.... நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...