வடக்கிருந்து உயிர்விட்ட தமிழ்மன்னன் வழித்தோன்றல்களா நாம்?
தண்ணீர் தர காவலாளி தாமதப்படுத்தினான் என உயிர்விட்ட பரம்பரையில் வந்தவர்கள் நாமா?
இன்று தண்ணீருக்காக கையேந்தி அடுத்த மாநிலத்தில் கேட்கிறோம்.
ஒரு பக்கம் தடுப்பணை மறுபக்கம் தண்ணீர் விடக்கூடாதென்ற போராட்டத்தில் தமிழர்கள் எல்லையில் தவிக்கின்றனர்...
நம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கு யார் தவித்தால் நமக்கென்ன...
நம் மாநில விவசாயி தானே சாகின்றான் நமக்கென்ன...
வெட்கம் கெட்டு கர்நாடகா பொன்னி அரிசி வாங்கி தின்போம்..
ஆனால் ஒவ்வொரு அரிசியும் நம் விவசாயியின் குருதி என்பதை உணர்த்திக்கொண்டே இருக்கும்...
சுய உணர்வின்றி ஆட்டம் பாட்டம் என அலட்சியமாக வாழ்வோம்..
உணவிற்காக நம் சந்ததிகள் அடுத்த மாநிலத்திடம் பிச்சை கேட்க போகும் நாள் நம் கண்முன்னே விரைவில்
விவசாயிகளுக்காக கர்நாடக மக்கள் ஒன்றிணைந்து ,தமிழ்நாட்டு மக்களுக்கு குடிக்க கூட நீர் தர மறுத்தால் நமக்கென்ன...
நம் நாட்டு கரண்ட் அங்கு போகக்கூடாதென போராடவா போகின்றோம்...
விதியென நினைத்து வீழ்வோம்....
ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.... மழை பெய்து தண்ணீர் வரும்போது அதைத் தடுத்து நிறுத்த நம்மிடம் போதிய அணைகள் இல்லை. கடலில் கடந்து வீணாகப் போகிறது. நதிகள் இணைப்பது பற்றி பல வருடங்களாக வெறுமனே பேசிக் கொண்டு மட்டும் இருக்கிறோம்..... :(
ReplyDeleteபோகப் போக இன்னும் என்ன நடக்கப்போகிறதோ என்று தெரியவில்லை. கொஞ்ச நஞ்சம் இருந்த மனிதத்தைத் தொலைத்துவிட்டு என்ன சாதிக்கப்போகின்றோமோ? வேதனையே.
ReplyDelete