Thursday 4 August 2016

ரோஸ்லின் வேலைக்குச்செல்கிறார்....

ரோஸ்லின் வேலைக்குச்செல்கிறார்....

 மனம் நிறைந்த நன்றி கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு.

 கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லினுக்கு மதிப்பிற்குரிய கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் அவர்களது வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியப்பணி அளித்துள்ளார்.

4.8.16 நேற்று காலை நானும் ரோஸ்லினும் வெங்கடேஸ்வரா பள்ளிக்குச் சென்றோம்....அப்பள்ளியின் ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். 

அப்பள்ளியின் நிறுவனரும்,முதல்வருமான கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்று,ரோஸ்லினின் சான்றிதழ்களை பார்த்து விட்டு நீங்கள் எந்த பாடம் எடுக்க விரும்புகின்றீர்களோ அந்த பாடம் எடுக்கலாம்...அதற்குமுன் சில நாட்கள் வகுப்பு செயல் பாடுகளை உற்றுநோக்குங்கள்...என்று கூறியதுடன்

                     பள்ளி ஆசிரியர்களை அழைத்து இவர் என் குடும்பத்து சகோதரி இவர்களை அன்புடனும் பரிவுடனும் கவனித்துக்கொள்வது உங்கள் பொறுப்பு...அன்பும் அரவணைப்பும் மட்டுமே இப்போது இவர்களுக்குத்தேவை...என்று கூறிய போது மனம் நெகிழ்ந்து ரோஸ்லின் கண்கலங்க.... கவலைப்படாதீங்கம்மா நல்லா பார்த்துப்பாங்கன்னு கூறி அழைத்து போகச்சொன்னார்.

                                  என்னிடம் நீங்களும் கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக்கிறேன்னு சொன்ன போது ஒரு பாதுகாப்பான இடத்தில் அன்பான அரவணைப்பில் ரோஸ்லினை விட்டு வந்த நிம்மதியுடன் ...மனம் நெகிழ பள்ளி வந்தேன்.

                                 பள்ளியில் சகோதரி திருமதி அஞ்சலிதங்கம் மூர்த்திஅவர்களிடம் ரோஸ்லினை உங்க பள்ளியில் தான் விட்டுட்டு வந்தேன் எனக்கூறிய போது மகிழ்ந்து இனி கவலை வேண்டாம் சார் பார்த்துப்பாங்க தற்போதைக்கு போகட்டும்,
   ஆனால் நிரந்தர பாதுகாப்பு என்பது அவருக்கு அரசுப்பணியை அவருக்கு பெற்று தருவதுதான் சரி..அதற்கு விரைந்து முயற்சிப்போம் என்றபோது சரியான பொருத்தமாக இருவரும் வாழ்வதை எண்ணி மகிழ்ந்தேன்.

          அவரது மகனையும் ரோஸ்லின் விரும்பினால் பள்ளியில் சேர்த்துக்கலாம்...பன்னிரண்டாம் வகுப்பு வரை இலவசமாகவே படிக்கலாம் என்ற போது மனம் உருகித்தான் போனது...பணம் மட்டுமல்ல வாழ்க்கை என்பதற்கு உதாரணமாக அவர்கள் இருப்பதை உணர்கின்றேன். ...

இருவருக்கும் என் மனம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கின்றேன்.

7 comments:

  1. எளிதில் மறந்து வாழ முடியாது என்றாலும் அந்தச் சகோதரிக்கு சந்தோஷமான வாழ்க்கை இனிமேல் தொடரட்டும்...

    ReplyDelete
  2. நானும் உங்கள் நன்றி அறிவிப்பில் பங்கு கொள்கின்றேன்.தங்கம் மூர்த்தி குடும்பத்தினருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. உங்கள் நல்ல எண்ணத்துக்கும் முயற்சிக்கும் நன்றி திருமதி. கீதா

    ReplyDelete
  4. தங்கம் மூர்த்தி குடும்பத்தினரைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  5. திரு தங்கம்மூர்த்தி அவர்களுடைய பெருமனதைப் பாராட்டுவோம். இதனைப் பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  6. நல்ல செய்தி. பாராட்டுகள்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...