மறக்க முடியாத நாளாக 24.8.16
நூற்றாண்டு கடந்த ஆர்.சி மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்ற விழா..
முகநூல் நண்பர் திருமிகு அறிவுடைநம்பி அவர்கள் , தங்கள் பள்ளியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்...அவருக்காக கலந்து கொள்வதென முடிவு செய்து வருகின்றேன் என்றேன்.
விழாவின் பொறுப்பாளர் திருமிகு ஜான்பிரிட்டோ அவர்கள் என்னிடம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அழைத்த போது கூட நான் ஏதோ சிறியபள்ளி என்ற எண்ணத்தில் சரி என்று அப்பள்ளியில் பணிபுரியும் வலைப்பூ சகோதரர் திருமிகு மணவை ஜேம்ஸ் அவர்களிடம் கேட்ட போது...
அப்பள்ளியின் சிறப்பையும் பிரமாண்டத்தையும் உணர்ந்தேன்..
1907 இல் ஆசிரிய பயிற்சி பள்ளியாகத்துவங்கப்பட்டு பின் 1945 இல் உயர்நிலைப்பள்ளியாக செயல்படத்துவங்கியப்பள்ளி
1978 முதல் மேல்நிலைப்பள்ளியாகச் சிறப்புடன் செயல்பட்டு கொண்டு வருகின்றது.
5 வருடங்களாக வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம் துவங்கி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கி வருகின்றனர்.
ஏறக்குறைய 2000 மாணவர்கள் படிக்கின்றனர்.
பள்ளியின் தாளாளரும் தலைமையாசிரியருமான அருட்தந்தை சகாய செல்வராஜ் அவர்களின் எளிமை மிகவும் வியக்க வைக்கின்றது.
நான் வருகின்றேன் என்றவுடனே நண்பர் அறிவுடைநம்பி அவர்கள் உபசரித்து பள்ளிக்கு அழைத்து சென்றார்...ஆசிரியர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்றனர்.
தமிழாசிரியர்கள் பாரம்பரிய உடையில் விழாவை நடத்தியது மிகவும் சிறப்பு.
முற்றிலும் ஆண்கள் பணிபுரியும் பள்ளி...பெண் ஆசிரியர்கள் யாரும் இல்லையா எனக்கேட்டேன்..இல்லை என்றார்கள்...
துறுதுறுவென ஓடி ஆடிக்கொண்டிருந்த பசங்களைக்கண்டதும் அவர்களின் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது எனலாம்...அவர்களின் பணிவு இக்காலத்தில் இப்படி கூட மாணவர்கள் இருக்கின்றனரா...ஆச்சரியப்பட்டேன்..
ஒரு மாணவன் படித்துக்கொண்டே சமையல் பணிகளுக்கு போவதாக அறிந்த போது அவனின் பொறுப்பு மனதை நெகிழ வைத்தது.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மிகவும் அருமை..
ஆசிரியர்களின் விருந்தோம்பல் பண்பு பாராட்டுதற்குரியது..என் மேல் அன்பும் நம்பிக்கையும் வைத்து அழைத்து சிறப்பித்த நண்பர் அறிவுடைநம்பி அவர்களுக்கு மிக்கநன்றி...
சகோதரி அவர்களின் வலைப்பதிவுக்கு நன்றி. தெரிந்து இருந்தால் நானும் வந்து உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்தித்து பேசி இருப்பேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோ...இனி வரும் போது அவசியம் சொல்றேன் சார்.
Deleteவாழ்த்துகள் வாழ்த்துகள் மா! வலைநண்பர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கும் நன்றி. ஆமா... அதே பள்ளியில்தானே நம் ஜோசப் விஜூவும் இருக்கிறார்? அவர் என்ன ஆனார்? பதிவுகளும் இடுவதில்லை..தொலைபேசியில் தொடர்பு கொள்வதும் இல்லை! ஒரு நல்ல பதிவரை ஏன் இழந்தோமென்றும் தெரியாத குழப்பத்தில் பல முறை தவித்திருக்கிறேன்...நீங்களாவது விசாரித்திருக்கலாம் இல்ல..? (முன்னரே தெரிவித்திருந்தால் சொல்லியே அனுப்பியிருப்பேன்) விழாக்கள் தொடர வாழ்த்துகள் மா!
ReplyDeleteஜேம்ஸ் சொன்னாங்க அண்ணா...நான் மைக்ல பேசும்போதே குறிப்பிட்டேன் விஜு சாரை ஆனா அவர்கள் என்னை பார்ப்பதற்கு விரும்பல போல...ஜேம்ஸ் சகோவிடம் கூட கேட்டேன் விஜூ சார் எங்க இருக்கார்னு...புரிந்து கொள்ள முடியல..அவரை..அண்ணா
Deleteவாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteவிழா நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துகள்....
ReplyDelete