பணம் இந்த பள்ளியில் இல்ல மேம்
---------------------------------------------------
புதுகையின் சிறந்த தனியார் பள்ளியில் இருந்து ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோர்..எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளார்கள்..
முதலில் பள்ளியை இரண்டு முறை வந்து சுற்றி பார்த்து ,கழிப்பறைக்குச் சென்று பார்த்து விட்டு திருப்தியான பின் சேர்த்துள்ளனர்....
அந்த குழந்தையிடம் நேற்று மாலை குட்டிமா நல்லாருக்கியா..இந்த பள்ளி பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..பிடிச்சிருக்கு மேம் என்றாள்...
நீ படித்த பள்ளிக்கும் இந்த பள்ளிக்கும் என்னடா வித்தியாசம் என்று கேட்டேன்..
ஒண்ணுமில்ல மேம். அங்கயும் மிஸ் எல்லாம் சாப்டா இருப்பாங்க..இங்கயும் அப்படிதான் இருக்கீங்க..
அந்த பள்ளி மின்விசிறி எல்லாம் வச்சு அழகா இருக்கும்ல என்றேன்..இல்ல மிஸ் சுவரெல்லாம் இங்க் கறையா இருக்கும் ..இங்க இல்ல என்றாள்.
இப்ப தான் சுண்ணாம்பு நாங்க அடிச்சதால புதுசா தெரிகிறது...
வேற என்னடா வித்தியாசக் என்றேன்..
அங்க பணம் ரொம்பக் கேக்குறாங்க இங்க அப்படி இல்லன்னு
அந்தக் குழந்தை சொன்ன போது இப்படி எங்களை நம்பி வரும் குழந்தைகட்காக கூடுதலாக மகிழ்வான கற்றலை அளிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிறது....
பத்திரிக்கைகளும்,முன்னணி இதழ்களும் அரசுப் பள்ளியின் முன்னேற்றங்களை எடுத்து கூறத்துவங்கியுள்ளது ...அரசுப்பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன என்பதை எடுத்து காட்டுகின்றன..

அரசுப் பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியது நல்ல விஷயம்.
ReplyDelete“குட்டிமா என்றெல்லாம் அங்கே அன்போடு குழந்தைகளைக் கூப்பிட மாட்டார்கள்... இங்க நீங்க கூப்பிடறது ரொம்பப் பிடிக்குது மேம்”னு அந்தக் குழந்தைக்கு சொல்லத் தெரியல...இருந்தாலும் உங்கள் அணுகுமுறை மகிழ்வளிக்கிறது.. கலக்குங்க வாழ்த்துகள்.
ReplyDeleteSuper
ReplyDelete//அரசுப்பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன // நம்பிக்கை. வாழ்த்துகள்
ReplyDelete