நன்றி கவிஞர் வைகறைக்கும் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்.....
கவிஞர் வைகறையின் தனித்தன்மையாகத் தான் படித்த நல்ல நூல்களைத் தந்து அதன் சிறப்பைக்கூறி, வாசிக்கச்சொல்லி பின் வாசித்துவிட்டீர்களா?என அக்கறையுடன் கேட்டு ,
இல்லையென நான் சொல்லும் போது பரவால்லமா நேரம் கிடைக்கும் போது அவசியம் படிங்கன்னு சொல்வது வழக்கம்...
அப்படி தந்த நூல்களில் ஒன்று கவிஞர் அம்சப்ரியா அவர்களின்
”காற்றை அழைத்துச்செல்லும் இலைகள்”,
நான் எழுதுவது கவிதையா என்ற சந்தேகம் முளைத்தெழுந்த ஒரு மாலைப்பொழுதில் தான், வைகறை இந்நூலைப் படிங்கம்மா,.. கவிதைக்குறித்த ஒரு புரிதல் உண்டாகும் என்றார்.
படிக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கும் போதெல்லாம் வேறு வேலைகளிலேயே கவனம் செல்லும்...
நீண்ட நாட்களாக வாசிக்காமல் என் கைப்பையிலேயே இருந்த இக்கவிதை நூலை , இன்று கனத்த மழைபெய்து கொண்டிருந்த கணத்தில் கையிலெடுத்து வாசிக்கத்தூண்டியது , கவிஞர் அம்சப்ரியாவின் மற்றொரு நூல்.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சிறு நூல் வரிசை வெளியீடான “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு..’”
அதைப்படித்ததும் ஏற்பட்ட ஆவலில் “காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்”நூலைப்படிக்காமல் விட்டோமே என்ற ஆதங்கத்தில் படித்த போது....
காற்றை மட்டுமல்ல கவிதையின் பயணத்தில் என்னையும் அழைத்துச் சென்று ஒரு நல்ல நூலுடன் பயணித்த நிறைவைத் தந்துள்ளது.
கவிதை தனது பயணத்தில் புதுக்கவிதையிலிருந்து ,நவீனக்கவிதைக்கு செல்லத்துவங்கியதன் அவசியத்தை உணர்த்தியது.... ”கவிதையைக் கண்டறிந்து,கவிதையைப் புரிந்து கொண்டுஅதன் மைய ப்பொருளை உணர்ந்து,கவிதைக்கான ரசனையை உணரவைத்து,நவீனக்கவிதையின் அடையாளத்தை வரையறுத்து,கவிதை எவ்வாறு அணுகுதல் என்பதைக் கற்பித்து....நவீனக்கவிஞர்களின் சிறந்த கவிதைகளை அறிமுகப்படுத்துவதுடன் அவர்களை ஊக்குவித்தலுமாக 13 கட்டுரைகளில் கவிதையோடு கவிதையாக வாழ்ந்து நம்மையும் வாழவைக்கின்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.
கவிதை எழுதும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாக
கவிஞர் அம்சப்ரியா அவர்களின் ”காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்” விலை ரூ 80/
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41,கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை-600011
044-255582552

காற்றை அழைத்துச்செல்லும் இலைகள்
ReplyDeleteதலைப்பே ஒரு கவிதையாக,,,/வாழ்த்துக்கள்/
அருமையான கவிதை நூலை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான விமர்சனம்
ReplyDeleteசிறந்த நூல் அறிமுகம்
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு நன்றி! வாய்ப்பு கிடைக்கையில் வாங்கி வாசிக்கின்றேன்!
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteநல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.
ReplyDelete