Wednesday 11 May 2016

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...
 நன்றி சே.தமிழா,அப்பாஸ் . 

பார்த்ததும் இல்லை,பேசியதும் இல்லை.

கவிஞர் வைகறையின் பதிவைப்பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து ரூ5000/ அனுப்பியுள்ளார்...முகநூல் நண்பர் சே.தமிழா.. என்ற தமிழரசன்.https://www.facebook.com/chetamilaa?fref=ts

பொள்ளாச்சியைச்சேர்ந்த இவர் ..தற்போது சென்னையில் பணி புரிகின்றார்...மறைந்த கவிஞன் வைகறையின் மகனுக்கு நீளும் உதவிக்கரங்களை வணங்குகின்றேன்...

 நேற்று ஒரு திருமண சந்திப்பில் திடீரென வந்து ரூ 500 கொடுத்தார் நண்பர் அப்பாஸ் தனது தேவதையான மகளை அறிமுகம் செய்து...எதிர்பார்க்காத உதவி கிடைக்கும் போது மனம் நெகிழ்கின்றது...மிக்க நன்றி அப்பாஸ்.https://www.facebook.com/absyasmine.absyasmine?pnref=friends.search

 பணம் என்பதை விட தனக்கு அப்பா கொடுத்த உறவுகளாய் அவன் வளர்ந்த பிறகு உணரும் போது நம்மில் அவன் தந்தையைக் காண்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் தயாராக உள்ள போது ரூ5,00.000 என்ற இலக்கில் தற்போது ரூ 1,25,000 சேர்ந்து உள்ளது...

 தொடரும் கரங்களுக்கு அன்பான நன்றிகள்....
 தொடரும் உங்கள் அன்பால் விரைவில் சேர்ந்திடும் நாம் எதிர்பார்த்த ரூ5,00,000.. இத்தொகை கீழ்க்கண்ட கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.எதிர்பார்த்த தொகையான ரூ 10,00,000 ஆகஸ்ட் மாதத்திற்குள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு...
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320 CIF No. : 80731458645 நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும். vaigaraifamilyfund@gmail.com உதவும் கரங்களுக்கு மிக்க நன்றி

8 comments:

  1. நட்பின் வலிமை இது! தொடரட்டும்!

    ReplyDelete
  2. நெகிழ வைக்கும் பகிர்வு

    ReplyDelete
  3. வரும் வருகிறது வந்துகொண்டே இருக்கிறது...வந்துவிடும் த.ம.1
    இதுபோலும் பதிவுகளில் வங்கிக் கணக்கு விவரங்களையும் தருவது, தரவேண்டும் என்று நினைப்பவர்க்கு உதவும் இல்லையா சகோதரி?

    ReplyDelete
  4. நெகிழ வைக்கும் பதிவுதான்...

    ReplyDelete
  5. சமூக வலை தளங்களின் நன்மைகளுள் ஒன்று எங்கோ இருந்தாலும் உதவும் உள்ளங்களை அறிந்து கொள்ள முடிகிறது. நண்பருக்கு பாராட்டுகள்

    ReplyDelete
  6. நன்றி அப்பாஸ் சார்

    ReplyDelete
  7. நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் இருவருக்கும் நன்றி!

    ReplyDelete
  8. குரித்துக் கொண்டோம் சகோ. அனுப்புகின்றோம் ஜூனில்.

    அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகள். சமூகவலைத்தளங்களில் நன்மைகளும் உண்டுதான்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...