Monday 2 May 2016

வீதி கூட்டம்-26

வீதி கூட்டம்-26
கவிஞர் வைகறை நடத்திய வீதி கூட்டம்

17.4.16 இன்று வீதி கலை இலக்கியக்கூட்டம் மிகச்சிறப்புடன் துவங்கியது. 

துவக்க நிகழ்வாக படித்ததில் பிடித்தது/அனுபவங்கள் பகிர்வு பகுதி

 கவிஞர் பவல்ராஜ்,

தனக்கு பிடித்த ஹைக்கூ என

 ”என்ன சொல்லி அனுப்ப
 விற்ற ஆடு
 வீட்டுவாசலில்”

 கவிஞர் மீனாட்சி
 மலேசியாவைச்சார்ந்த திருமிகு டத்தோ சாமுவேல் அவர்கள் 1962 இல் எழுதியுள்ள ”அறிவு நூன் முடிவு “நூல் குறித்து பேசினார்.























 விதைக் கலாம் கஸ்தூரிரங்கன்

 ஆசீவகம் நூல் குறித்து தமிழரின் மெய்யியல் தத்துவம் எப்படி பிராமணீயத்தால் அழிக்கப்பட்டுள்ளது என்பதைக்கூறினார். மேலும் ஏழு கன்னிமார்கள் நூல் திரிபு குறித்தும் பேசினார்.

 கவிஞர் நாகநாதன் -தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் நூலில் தனக்கு பிடித்த தகவலைக்கூறினார். 

விதைக் கலாம் மலையப்பன்.
 ஒரு ஆசிரியருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி கூறி மனிதநேயம் அழிந்து வருவதைப் பற்றி கூறி தீர்வு காண வேண்டும் என்றார். 

கவிஞர் சோலச்சி.

 கண்முன் பார்த்த விபத்தில் மக்கள் பார்வையாளராக இருந்ததை பற்றி கவலைப்பட்டார்.

 கவிஞர் கீதா எழுத்தாளர் இமயம் அவர்களின்”எங்கதெ” நூலைப்பற்றி கூறினார்.


வீதி நிகழ்வுகள் 

தலைமை

ஒளிப்பதிவாளர் புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்றார்.

 வரவேற்பு கவிஞர் சோலச்சி ”பணம் கொடுப்பான் ஓட்டுக்கு ”என்ற கிராமியப்பாடலைப்பாடி, அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

 நூல் அறிமுகம்-

 கவிஞர் மீரா.செல்வக்குமார் எழுத்தாளர் கனவுப்பிரியன் அவர்களின் “கூழாங்கற்கள்” நூல் குறித்த விமர்சனத்தைக் கவிதையால் வடித்து விமர்சனத்தில் புதிய பாணியை புகுத்தி கூழாங்கற்கள்:-

”தண்ணீர் செதுக்கிய சிற்பங்கள்.

ஆற்றுக்காரியின் ஆயிரம் கண்கள்.

கனவுப்பிரியனும் நெஞ்சப்படுகையில்
கூழாங்கற்கள் பொறுக்கி..
ஞாபக நதிகளில் எறிந்திருக்கிறார்.
சிந்தனைச் சிற்பங்களுக்கு...”

 என கவிதையால் நூலுக்கு அணி செய்தார்.

 கவிதை வாசித்தல்

கவிஞர்கள்

மீனாட்சி-

சங்க இலக்கிய உடன்போக்கு ,திருமணம் குறித்த கவிதை வாசித்தார். 


பவல்ராஜ் கவிதைகள்

 ”உப்பு இருக்கா?
சர்க்கரை இருக்கா?
 கணவன் மருத்துவமனையில்
 மனைவி சமையலறையில்”
 -----------------------------------------------

 ”அவனுக்குள் அவள்
 அவளுக்குள் அவன்
 கல்லறை தனித்தனியா”

குட்டிக்கவிதைகளில் நகைச்சுவை,சமூக அவலம் ,காதல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைகளை சிறப்புடன் வாசித்தார். 

மாணவக்கவிஞர் நடராசன்

 வெறிக்காற்றாய் என்ற தலைப்பில்

 “பொன் விற்பவனுக்கு
 தொழிலே தெய்வம்.
... .................................. ”

காற்றாடியாய் இரு சுழலாதே “,
ஒரு தலைக்காதல்,வராதட்சணை.ஆகிய கவிதைகளை சிறப்புடன் படைத்தார்.
நாகநாதன்
பாஸ்புக்கிலிருந்து ,பேஸ்புக்கால் பணம் கரைவதைக்கூறும் கவிதையை கூறினார்.,

 எஸ்.மணிகண்டன்

அவரது துளிப்பாக்கள் அனைத்தும் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டு ,அனைவர் கவனத்தையும் கவர்ந்தது.

 "காற்றை நிரப்பினார்
 மூச்சு நின்றது
 பலூன்”

மலையப்பன்

பிறந்தநாள் பரிசு என்ற தலைப்பில் விஞ்ஞானக்கவிதை வாசித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

 மீரா.செல்வக்குமார்

 ” ஒற்றைக்கேள்வி”என்ற கவிதையை வாசித்தார். 


வைகறை

 தனது மரணத்தை முன்கூட்டியே உணர்ந்தார்ப் போல.

”.ஃப்ரிசர்பாக்ஸ்ம் சில உதிரிப்பூக்களும்”

என்ற கவிதையை வாசித்து அனைவர் மனதையும் கனக்கச்செய்துவிட்டார்...

இதுவே இவரது இறுதி கவிதையாய் அமையும் என்பதை அப்போது நாங்கள் உணரவில்லை.

பாராட்டு

 நூல் வெளியிட்ட மிடறு ஆசிரியர் முருகதாஸ்,நீலா மற்றும் கவிஞர் மீரா பரிசு பெற்ற கீதா ஆகியோரைப் பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டது.

 புதிய உறுப்பினர்கள்

ஜான்ஸிராணி ,முகமது கனி ஆகியோர் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

 இலக்கியவாதி அறிமுகம்

 சகோ கஸ்தூரி ரங்கன்
                            “மாயா ஆங்கிலோ”

என்ற ஆப்பிரிக்க இலக்கிய வாதியை வீதிக்கு சிறப்புடன் அறிமுகம் செய்தார். ”நான்பேசினால் மனிதர்கள் இறப்பார்கள் என்று 5 வருடங்கள் பேசாமலே இருந்த ஆகச்சிறந்த இலக்கியவாதியை வீதி உணரத்துவங்கியது.

 இதழ் அறிமுகம்-வைகறை

 ”பாஷோ”இரண்டாவது இதழை வீதியில் அறிமுகப்படுத்தி ஹைக்கூ பற்றி அவர் கூறிய போது ஹைக்கூ குறித்த புரிதல் உருவானது.

திருவாரூரிலிருந்து வந்து கலந்து கொண்ட ஆசிரியர் திரு மணிமாறன் அவர்கள் மக்கள் பறைசாற்றும் கல்வி என்ற நூலை வெளியிட்டு அறிமுகம் செய்தார்.மாணவர்களுக்காகவும்,கல்வியில் புதிய மாற்றத்தைக்கொணரத்துடிக்கும் இளைஞர் வந்து வீதியைச்சிறப்பித்தது மகிழ்வான ஒன்று.

 தலைவர் உரை

 தேர்தல் அவசரம் என்ற கவிதையைப்படித்து ,வீதியின் பாதை நன்று,அடையும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்றார். 

சிறப்பு விருந்தினர்-

கவிஞர் கலியமூர்த்தி வீதியின் உறுப்பினர்கள் அனைவரும் படைப்பாளிகளாக இருப்பது மிகுந்த மகிழ்வான ஒன்று என்றும் ,அவரின் கவிதையான

                        ”கோவனத்தோடு இருந்தான்
                            என் முப்பாட்டன்.......”

என்ற கவிதையைப்படித்தும் வீதியைச்சிறப்பித்தார். நன்றியுரை -கவிஞர் ஜலீல் கூற வீதியின் 26 ஆவது கூட்டமும் ,வைகறை கலந்து கொண்ட இறுதி கூட்டமும் நிறைவுற்றது.

5 comments:

  1. 25ஆம் வீதி நிகழ்வின்போது, 26ஆவது வீதி நிகழ்வை யார்நடத்துவதென்று முடிவுசெய்யாததால், தானும் வைகறையும் ஏற்றுநடத்துவதாய் மு.கீதா என்னிடம் தொலைபேசியில் சொல்ல, நான் வைகறையைக் கேட்டீர்களா என, “அவர் எப்ப மாட்டேன்னு சொன்னாரு?” என்ற பதிலோடு, மீண்டும் வைகறை கீதா பொறுப்பில் இந்த 26ஆவது வீதி நடந்திருக்கிறது.
    அன்று கவிதைபற்றிப் பேச வேண்டும் என்று என்னிடம் வைகறை சொல்ல, நானும் பொத்தாம் பொதுவாக் கவிதைன்னா கடல்மாதிரி இருக்கும், “கவிதையில் சொற்கள்” என்பது பற்றிப் பேசச் சம்மதித்திருந்தேன்...

    ஆனால், வீதி நிகழ்வு நேரத்தில் எனது நண்பரின் மகன் திருமணம் திருமயத்தில்.. அதில் பேச அழைக்கப்பட்டிருந்த பாலபாரதி எம்எல்ஏ தேர்தல்பணி காரணமாக வராததால் நீங்கள்தான் இருந்து சிறப்புரை(?)ஆற்ற வேண்டும் என்ற வற்புறுத்தல் காரணமாக இந்த வீதி நிகழ்வுக்கு வர இயலாமல் போக, வந்திருந்தால் வைகறையைச் சந்தித்திருக்கலாம் எனும் உறுத்தல் இனி் எப்போது மறையும்...?

    வீதி மற்றும் கணினித் தமிழ்ச்சங்க நிகழ்வுகள் அவர் இல்லாமல் எப்படி அழகு பெறும்? என்ன சொல்லி வீதியைத் தேற்ற? யாது சொல்லி கணினித் தமிழ்ச்சங்கத்தை இனி நடத்த...?

    ReplyDelete
    Replies
    1. மீள முடியாமல் தான் உள்ளது.கூட்டத்தில் மீரா விருது பெற்றமைக்கு எனக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும் என்பதால் எனக்கு பதிலாக சோலச்சி அமைப்பாளராக பொறுப்பேற்றார்.

      Delete
  2. கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துகள் .
    கவிஞர் வைகறையின் பிரிவுதான்
    மனதில் கனமாக இருக்கின்றது...

    ReplyDelete
  3. This report is just like official minutes of "Veedhi" rather than total presentations on the day.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...