Thursday 24 March 2016

ஏன் செய்யல நாம்?

ஏன் செய்யல நாம்?

 கேரள மக்கள் தங்களின் பாரம்பரிய நடனமான கதக்களி மற்றும் களரி விளையாட்டை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் ,தங்களது பண்பாட்டை உலகு அறியச்செய்யும் வகையில்,சுற்றுலாத்தலமான மூனாறில் ஏற்பாடு செய்துள்ளதுள்ளனர்.

 அமெரிக்காவில் இசையரங்கில் மதிப்பிற்குரிய இசைஞானி இளையராஜா அவர்கள். இசையமைக்கும் பொழுது .ஒரு இசைக்கு மட்டும் அனைவரும் எழுந்து நடனமாடியதாகக் கூறியிருந்ததைப் படித்துள்ளேன்.

 அது என்ன இசை ?என அனைவரும் கேட்கையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய இசையான பறை என பெருமையாகக்கூறினாராம்..



















 உலகமே வியக்கும் ,ஆட வைக்கும் நமது பண்பாட்டினைக்கூறும் நமது பறை  இசையை துக்க வீட்டிற்கு ஒதுக்கி? நம்மை நாமே இழிவு படுத்தும் நிலை எப்போது ஏற்பட்டது.?                                                

 நமது பாரம்பரியக்கலைகளைக்கற்றுக்கொள்ள ஜப்பானிலிருந்து இரு பெண்கள் இன்று சென்னை வந்துள்ளனர்.

அவர்கள் சென்ற முறை வந்த போது பறை இசையை கற்று சென்றுள்ளனர். தற்போது ஒயிலாட்டம்,போன்ற கலைகளை அறிந்து கொள்ள திண்டுக்கல் வருகின்றனர்.

நமது கலைகளின் பெருமைகளை வெளிநாட்டினர் உணர்ந்துள்ள அளவு நாம் உணர்ந்துள்ளோமா என்பது வருத்தத்தை தரும் ஒன்றாகவே உள்ளது.

 நம் நாட்டில் உள்ள சுற்றுலாத்தளங்களில் இதற்கு ஏற்பாடுகள் செய்ய முடியுமா?
 பரதநாட்டியமே தமிழ்நாட்டுக்கலையாக படங்களில் உள்ளதை எந்தவித எதிர்ப்பும் இன்றியே சகித்துக்கொண்டுள்ளோம்.


 உண்மையில் நம் இசை என்ன என்பதைஅறிய வேண்டாமா?
நம் கலைகளை மீட்டெடுக்க வேண்டாமா?
 இதையெல்லாம் யார் செய்வது?

11 comments:

  1. //உண்மையில் நம் இசை என்ன என்பதை அறிய வேண்டாமா? நம் கலைகளை மீட்டெடுக்க வேண்டாமா?//

    மிகவும் நியாயமான ஆதங்கம்.

    தில்லானா மோகனாம்பாள், கடகாட்டக்காரன் போன்ற திரைப்படங்கள் மூலமே சிலவற்றின் சிறப்புக்களை நாம் இன்று அறிய முடிகிறது.

    யோசிக்க வைக்கும் சிறப்பான இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோ
    புகைப்படங்கள் அருமை
    தங்களது ஆதங்கம் நியாயமானதே நம்மில் யாருக்கும் சமூக அக்கரை இல்லை என்பதே உண்மை இதையெல்லாம் அரசே கவனத்தில் கொள்ளவேண்டும் அதேநேரம் மக்களின் ரசனை முற்றிலும் மாறி விட்டதும் உண்மையே
    மலையாளி கலையை வளர்ப்பான்
    தமிழன் கலைஞனை வளர்ப்பான்
    இதுதான் வித்தியாசம் இந்தத் தவறுகளின் தொடக்கம் புரிந்ததா ?

    ReplyDelete
  3. நம் கலைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும்...

    ReplyDelete
  4. நம்ம அரசியல்வியாதிகளுக்கு அடிச்சுக்கவே நேரம் இல்லை இதில் கலைகளை பற்றி எங்கே கவலைப்பட போறாங்க ?

    அருமையான பதிவு

    ReplyDelete
  5. //பரதநாட்டியமே தமிழ்நாட்டுக்கலையாக படங்களில் உள்ளதை// உங்கள் ஆதங்கம் நியாயமானது. அதிகாரபீடங்கள் மாறவேண்டும்.

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரி
    சிந்திக்க வேண்டியது மட்டுமல்ல ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் வித்திட வேண்டுமென அறிவுறுத்தும் பதிவு. சமூக சிந்தனைகள் தொடரட்டும். நன்றி.

    ReplyDelete
  7. உங்கள் ஆதங்கம் சரியே, மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கொஞ்சம் கூட மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. நாம் அளவுக்கதிகமாக மேற்கத்திய நாகரிகத்தை தூக்கிப் பிடித்துவிட்டோம். இனிமேலாவது நமது பாரம்பரியத்தையும் கொஞ்சம் தூக்கிப் பிடிப்போம்.
    த ம 2

    ReplyDelete
  8. ஆஹா, எனது கேரளப்பயணத்திற்குப் பிறகு இதே ஆதங்கத்தை நானும் எழுதினேனே! நான் பார்த்தது தேக்கடியில்

    ReplyDelete
  9. எனது பதிவின் இணைப்பு இங்கே http://www.ramaniecuvellore.blogspot.in/2016/02/blog-post_12.html

    ReplyDelete
  10. நமது பாரம்பரியக்கலைகளை
    மீட்டெடுக்க பட வேண்டும் கண்டிப்பாக/
    கலாச்சாரம் நம்முகம் போல/

    ReplyDelete
  11. ஆம் உண்மைதான் கீதா. எப்படி அவர்கள் போற்றுகின்றார்கள் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை நான் ஒரு பதிவு எழுதுகின்றேன். ஏற்கனவே இதைப் பற்றி சிறிதாக எழுதியிருக்கின்றேன் எங்கள் தளத்தில். விரிவாக எழுதுகின்றேன்...உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானதே.மீட்டெடுக்க வேண்டும்...

    கீதா

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...