ஏன் இப்படி?
----------------------
என்னையே பார்த்துக்கொண்டு,
தலையே நிமிராமல்,
கழுத்தை சுத்திசுத்தி கவனித்துக்கொண்டு,
ஒன்றும் புரியாது,
மிரளமிரள விழித்துக்கொண்டு,
பலகையில் பெயரைக்கிறுக்கிக்கொண்டு,
யாராவது காட்ட மாட்டார்களாவென ஒன்று,
கவனிக்காத நேரத்தில்
சைகையில் பேசிக்கொண்டு,
திரும்பிப்பார்க்கும் கணத்தில்
அசடு வழிந்து கொண்டு,என
இருபது முகங்களின்
இத்தனைச்சேட்டைகளையும்
கண்டும் காணாதது போல
சிரிக்கவும் முடியாமல்
நான் நடந்து கொண்டு..
ஆங்கிலத்தேர்வு முடிந்தது டோய்னு
சத்தமிட்டுக்கொண்டே பறந்தனர்
பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகள்
அமெரிக்க குழந்தைகளை தமிழ் மொழியை கட்டாயமா படிக்க சொன்னா..எப்படி இருப்பார்கள் ? என ஒரு நிமிடம் தோன்றாமல் இல்லை. வேற்றுக்கிரகத்தில் இருப்பது போலவே இருந்தனர் கிராமத்து குழந்தைகள். யோசிக்க வேண்டிய நிலை.
என்னையே பார்த்துக்கொண்டு,
தலையே நிமிராமல்,
கழுத்தை சுத்திசுத்தி கவனித்துக்கொண்டு,
ஒன்றும் புரியாது,
மிரளமிரள விழித்துக்கொண்டு,
பலகையில் பெயரைக்கிறுக்கிக்கொண்டு,
யாராவது காட்ட மாட்டார்களாவென ஒன்று,
கவனிக்காத நேரத்தில்
சைகையில் பேசிக்கொண்டு,
திரும்பிப்பார்க்கும் கணத்தில்
அசடு வழிந்து கொண்டு,என
இருபது முகங்களின்
இத்தனைச்சேட்டைகளையும்
கண்டும் காணாதது போல
சிரிக்கவும் முடியாமல்
நான் நடந்து கொண்டு..
ஆங்கிலத்தேர்வு முடிந்தது டோய்னு
சத்தமிட்டுக்கொண்டே பறந்தனர்
பன்னிரண்டாம் வகுப்பு குழந்தைகள்
அமெரிக்க குழந்தைகளை தமிழ் மொழியை கட்டாயமா படிக்க சொன்னா..எப்படி இருப்பார்கள் ? என ஒரு நிமிடம் தோன்றாமல் இல்லை. வேற்றுக்கிரகத்தில் இருப்பது போலவே இருந்தனர் கிராமத்து குழந்தைகள். யோசிக்க வேண்டிய நிலை.
அருமையாக சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteஆங்கிலம் கற்க சொன்னாலே
வேற்றுக்கிரக உணர்வே
வந்து விடும் நம்மூர் குழந்தைகளுக்கு...
ஆமாம்பா அதிலும் கிராமத்து குழந்தைகள் கல்வியை பார்த்து பயப்பட இதுவும் ஒரு காரணம்.
Deleteஆங்கிலம் என்று பயமுறுத்தாமல் ..விருப்பத்துடன் கற்க செய்ய வேண்டும்...
ReplyDeleteஅன்று நாம் தான் பயந்தோம் ...பாவம் இந்த தலைமுறை யாவது ....மகிழ்வுடன் புதிய மொழி கற்க .....நாம் முயற்சிக்க வேண்டும்..
மாற்றமில்லைமா கற்பித்தலில்....மாற்றம் வேண்டும்மா.
Deleteஉண்மைதான் சகோதரி!
ReplyDeleteபாவமாக இருந்தது அய்யா....இது குழந்தைகளின் எதிர்காலம்...என்ன செய்வதுன்னு தெரியல அய்யா.
Deleteஅமிர்தத்தையே கலந்தாலும் வேப்பஎண்ணை கசப்புதானே சகோ....
ReplyDeleteதமிழ் மணம் 2
உண்மைதான்...ஆங்கிலேயர் போய்விட்டார்கள் ஆங்கிலம் இன்னும் அச்சுறுத்திக்கொண்டு...சகோ.
Delete//அமெரிக்க குழந்தைகளை தமிழ் மொழியை கட்டாயமா படிக்க சொன்னா..எப்படி இருப்பார்கள் ? //
ReplyDeleteஅமெரிக்க குழந்தைகள் இந்திய குழந்தைகளை போல இருக்கமாட்டார்கள் பயப்படமாட்டார்கள்.காரணம் இங்கு வேற்று மொழியை சொல்லிதரும் முறைதான் மொழியை திணிக்கமாட்டார்கள் உன்னால் எந்த அளவிற்கு முடிகிறதோ அந்த அளவிற்கு கற்றுக் கொள் என்பதாகவே இருக்கிறது இங்கு.
மகிழ்ச்சி ...சார்...இங்கு குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதை உணர்கின்றேன்..
Deleteஉங்களின் இந்த பதிவு எனது ப்ள்ஸ் டூ தேர்வை அப்படியே நினைவிற்க்குள் கொண்டு வந்தது..இந்த மாணவர்களை போலத்தான் நாங்களும் அன்று இருந்தோம். இன்னும் கற்று தரும் முறையும் கற்கும் முறையும் மாறவில்லை போல இருக்கிறது
ReplyDeleteநானும் இப்படி இருந்தவள் தான் சார்..இன்னும் மாறல...எப்ப மாறும்னு தெரியல..இதையெல்லாம் நினச்சு பார்க்க ஆள் இருக்காங்களான்னும் தெரியல சார்.
Deleteஉண்மைதான் சகோதரியாரே
ReplyDeleteகட்டாயப் படுத்தினாலே அது வேப்பங்காய்தான்
ஆமாம் அண்ணா..தமிழ் வகுப்பில் மட்டும் தான் குழந்தைகள் மகிழ்வாக இருக்கின்றார்கள்..
Deleteஅப்போது பள்ளியில் 5ம் வகுப்பில் இருந்துதான் ஆங்கிலம்
ReplyDeleteஅது தான் சரி..
Delete100% உண்மை...
ReplyDeleteகல்வியில் மாற்றம் வேணும் சார்.
Deleteகல்வியில் மாற்றம் வேணும் சார்.
Deleteஇன்னும் பல பள்ளிகளில் இந்த மாற்றம் இன்னும் மாறவில்லை என்றே தோன்றுகின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல நம் அண்டை மாநிலங்களிலும்தான்.
ReplyDeleteநானும் கிராமத்தைச் சேர்ந்தவள்தான். ஆனால் நான் கற்ற பள்ளி அரசு சார்ந்த பள்ளிதான் என்றாலும் கான்வென்ட் ஆனதால் எங்கள் ஆசிரியர்கள் மிக மிக நன்றாகக் கற்றுக் கொடுத்தார்கள் என்பதால் பயமின்றி எழுதினோம் எனலாம். தப்பித்தோம். ஒருசிலரைத் தவிர. வீட்டிலும் படிப்புச் சூழல் இல்லாதவர்களைத் தவிர. பாவம் குழந்தைகள். நாகர்கோவிலில் அப்போது அரசுப் பள்ளிகள் கூட மிக மிக நல்ல முறையில் இயங்கின. எங்கள் வீட்டில் ஆண் குழந்தைகள் அனைவரும் அரசுப் பள்ளி பெண் குழந்தைகள் அனைவரும் அரசு சார்ந்த கான்வென்டில். ஆண்களும் நன்றாகத்தான் கற்றார்கள் ஆசிரியர்கள் நல்ல ஆசிரியர்களாக இருந்ததால்.
இப்போதுள்ள குழந்தைகள் பாவம். கல்வியில் மாற்றம் வர வேண்டும்..
நான் கான்வெண்ட்டில் தான்மா படித்தேன் ..ஆனா சுத்தமா ஆங்கிலப்பாடத்தை மனப்பாடம் மட்டுமே பண்ண வச்சாங்க...இலக்கணம் ஒன்றும் நடத்தல...வேலைக்கு வந்து நான் தனியா அஞ்சல் வழியில் படிச்சு இப்ப குழந்தைகட்கு நடத்துறேன்...நிச்சயம் மாறனும்மா
Delete
Deleteஆஹா இங்க நிறைய பேரு கான்வெண்ட் ஸ்கூலில் படித்தவங்களாக இருக்கிறார்களே..... நான் படித்தது மாநகரட்சி பள்ளியில்தான்
நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது என் நண்பன் என்னிடம் கேட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது- “இந்த இங்லீஷ் காரங்கஎல்லாம் போய்ட்டாங்க தானடா? அப்பறம் ஏன் டா இன்னமும் இந்த எழவப் படிக்கச் சொல்றாய்ங்க?” இந்தக் கேள்வி இன்னும் நம் குழந்தைகளிடம் எழுவதற்கு யார் பதில் சொல்வது? உணர்வுப்பூர்வமான பதிவு. நீங்கள் அம்மாவாகவும், ஆசிரியராகவும் இருப்பதன் நல்ல விளைவு இது.த.ம.4
ReplyDeleteஏன் இப்படி குழந்தைகளை துன்புறுத்துகின்றோம்னு புரியல அண்ணா.
Deleteஆஹா அருமைமா,,
ReplyDeleteதாங்கள் பின்னூட்ட பதிலில் சொன்னது போல் நானும் கிறித்தவ அருட்சகோதிரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் தான் படித்தேன், பள்ளிகளில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் நான் ஆங்கில பாடத்தில் தோல்வி தான்,, அதனால் அரசுதேர்வுக்கு பள்ளியில் அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டனர். தனித்தேர்வராக எழுதவைத்தனர்.
அந்த ஆங்கில தேர்வு எப்படா முடியும் என்று இருக்கும். பனிரெண்டாம் வகுப்பும் அப்படித்தான்,, ஆனால் பின்னால் தான் தெரிந்தது அதன் அடிப்படை இலக்கணம் சரியாக சொல்லிக்கொடுக்காமல் மனப்பாடம் மட்டுமே செய்ய வைத்தனர் என்ற வேதனையான விடயம். என் தமிழாசிரியர் தான் மொழி இலக்கணம் ஆங்கிலத்திற்கும் சேர்த்து சொல்லிக்கொடுத்தார். மிக எளிமையாக,,,
அடிப்படை சரியாக இருந்தால்,, இந்த பயம் இல்லை,.
இங்கு தமிழ் இலக்கணமும் சரியில்லை,தன்வினையும் பிறவினையும்,, ,,,,,
ஆங்கில இலக்கணம்??????
நல்ல பகிர்வு மா,,
பழய நினைவுகள்,, பின்னூட்டம் நீண்டுவிட்டது.
அருமை அக்கா...
ReplyDeleteஅமெரிக்கப் பிள்ளைகள் நன்றாகப் படிப்பார்கள் கீதா..பாடமுறை அப்படி இருக்கும். தாய் மொழி என்றா பல மொழிகளைக் கற்கின்றனர்?
ReplyDeleteஉங்கள் கற்றுக்கொடுத்தலைச் சொல்லவில்லை கீதா, பாடத் திட்டங்கள் அப்படி இருக்கும் என்று சொல்கிறேன். ஒரு மொழியைப் புரிந்து கொள்வதற்கான அடிப்படை சொல்லிக் கொடுத்தால் போதும்..ஆனால் அதையும் இதையும் மனப்பாடம் பண்ணச் சொன்னால் பிள்ளைகள் பாவம்.