World Tamil Blog Aggregator Thendral: உலகத்திருக்குறள் பேரவை-புதுகை

Monday 25 January 2016

உலகத்திருக்குறள் பேரவை-புதுகை

உலகத்திருக்குறள் பேரவை-புதுகை

திருமிகு தி.சு.மலையப்பன் அய்யாவின் முத்து விழா 25.1.16
.

என் இலக்கிய வாழ்வின் அடித்தளம் இங்கு தான் துவங்கியது.....என்னுடன் பணிபுரிந்த சக ஆசிரியரும் புலவருமான ச.தோ.தமிழ்மாறன் அவர்களால் நான் உலக இலக்கியப்பேரவையில் உறுப்பினர் ஆனேன்.

மாதந்தோறும் நடக்கும் கூட்டங்களுக்குச்செல்லும் போது அங்கு வருவோரின் தமிழ்ப்புலமை கண்டு வியந்து நிற்பேன்...மலை முன் தூசியென ...என் நிலை....

ஆண்டுதோறும் திருக்குறள் பேரவை நடத்தும் விழாக்களில் முதன்முறையாக திருக்குறளும் தந்தை பெரியாரும் என்ற கட்டுரை எழுதினேன்..ஆய்வுக்கட்டுரை தொகுப்பு நூலில் அது வெளிவந்த போது மனம் பறவையாய்...சிறகடித்து பறந்தது..

அடுத்த ஆண்டு சிலப்பதிகாரம் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதத்தூண்டினார் தமிழ்மாறன் அய்யா ..முதன்முதலாக மேடை ஏறியது அப்போதுதான் கட்டுரை வாசிப்பதற்காக..தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து நான் பெற்ற பரிசு.பெற்றபோது எனக்கே நம்பமுடியவில்லை...நானான்னு..இருந்தது.....

தொடர் கூட்டங்கள் கல்லூரிகளில் நடக்கும் போது ,உலகத்திருக்குறள் பேரவையின் மாநிலச் செயலரான திருமிகு தி.சு.மலையப்பன் அய்யா அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி பேசச்சொல்வார்கள்...

அவர்கள் கொடுத்த ஊக்கமே என்னை நான் கண்டுகொண்டு என்னிலிருந்த கவிஞரை வெளிக்கொணர்ந்தது என்றால் மிகையில்லை....

உலகத்திருக்குறள் பேரவையின் மாநில மாநாடு புதுகையில் நடந்த பொழுது ஓடி ஓடி செய்த பணிகள் மனநிறைவானவையாக...

இன்று அவருக்கு 80 வயது நிறைவடைந்துள்ளதால் அவருக்கு புதுகை திருக்குறள் பேரவையும் ,இளங்கோவடிகள் கழகமும் இணைந்து,புதுகை இலக்கிய ஆர்வலர்களும் இணைந்து நடத்திய முத்து விழா புதுகை நகர்மன்றத்தில் நடைபெற்றது..


அவ்விழாவில் புதுகையின் புகழ் பெற்றவர்களும்,தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்,திருமிகு அமுதன் அடிகளும்,முன்னாள் அமைச்சர் உபயத்துல்லாவும் கலந்து கொண்டு அய்யாவை சிறப்பித்தனர்....
முத்துவிழா மலர் வெளியிடப்பட்டது..
பெற்றோருக்கு செய்யும் கடமையாக மகளிர் குழு சீர்வரிசை எடுத்து சிறப்பாகக்கொண்டினோம்...இதற்கு முழுமுதற்காரணமாய் திருமிகு சந்திரா ரவீந்திரன் மாநில உலகத்திருக்குறள் பேரவை மகளிர் அணித்தலைவி சிரத்தையுடன் செவ்வனே முடித்தார்கள்....


அய்யாவின் ஆசைப்படி கோவையில் உள்ள திருக்குறளை தலைகீழாக எழுதி திருவள்ளுவரின் உருவப்படத்தை வரைந்துள்ள மாணவி ஹரிப்பிரியாவைப்பாரட்டி சிறப்பு செய்யப்பட்டது..

மனநிறைவான விழாவாக இன்று அய்யாவின் முத்து விழா சிறப்புற்றது...

7 comments :

  1. மிகவும் அழகான அருமையான செய்திகள். படங்கள் எல்லாம் அருமை. முத்துவிழா முத்தான விழாவாக அமைந்துள்ளது.

    இன்று முத்துவிழா காணும் திருமிகு தி.சு.மலையப்பன் அய்யா அவர்களுக்கு என் வணக்கங்கள்.

    முன்பு திருச்சியில் ஒவ்வொருமாதமும் திருச்சி மாவட்ட எழுத்தாளர்கள் சங்கக்கூட்டம் நடைபெறும். நான் அதில் மிகவும் ஆர்வமாகக் கலந்துகொண்டது உண்டு. ஏனோ எனக்கு அந்த ஞாபகமே வந்தது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. உலகத்திருக்குறள் பேரவையின் விழாப் பகிர்வுக்கு நன்றி. பேரவையின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சிறப்பான விழா மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. சிறப்பானதோர் விழா பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி!

    ReplyDelete
  5. விழா பகிர்வுக்கு நன்றி! தவறாக எண்ண வேண்டாம். திருக்குறளை தலைகீழாக எழுதி திருவள்ளுவர் படம் வரைந்த கோவை மாணவியை சிறப்பித்தோம்! என்று திருத்தினால் வாசிக்க எளிமையாக இருக்கும். நன்றி!

    ReplyDelete
  6. சிறப்பான விழாவைப்பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி கஹ்கோ!

    ReplyDelete
  7. சகோ என்றிருக்க வேண்டும் இறுதியில். தட்டச்சும் போது பிழை நேர்ந்துவிட்டது.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...