Saturday 9 January 2016

சமத்துவப்பொங்கல் விழா-2016

சமத்துவப்பொங்கல் விழா-

அசோக் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை..

இன்று9.1.16 சனிக்கிழமை புதுகையில் உள்ள அசோக்நகர் நடுநிலைப்பள்ளியில் சமத்துவப்பொங்கல் கொண்டாடுகின்றோம் நீங்கள் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என புதுகை செல்வா சார் அழைத்தார்..

குழந்தைகளோடு பொங்கல் கொண்டாட கசக்குமா என்ன?
பள்ளிக்கு சென்றதும்..அங்குள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று ,சுறுசுறுப்பாக பொங்கல் கொண்டாட ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர்.

பள்ளி இயற்கை சூழ ,தூய்மையாக இருந்தது...விழும் குப்பைகளை தலைமையாசிரியரே எடுத்து தூயமை செய்தார்...முன் மாதிரியான ஆசிரியர் என்பதற்கு இவரே உதாரணம்.


அமைதியாக சின்னக்குழந்தைகள் ஒருபக்கம் அமர்ந்திருக்க...பெரிய பையன்களும் சிறுமிகளும் அவர்கள் வீட்டு விழா போல வேலைப்பார்த்துக்கொண்டிருந்தனர்..


பொங்கல் செய்ய தேவையான பொருட்களை குழந்தைகளே அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்ததாகவும் ...பத்தாதற்கு ஆசிரியர்கள் வாங்கி செய்தோம் என்ற போது...மனம் சொல்ல முடியாத மனநிலையில்...

அறிவியல் ஆசிரியர் கரும்புகளை முக்கோணமாக வைத்துக்கட்டி பொங்கல் பாத்திரத்திற்கு மேல் அழகு செய்தார்..

அவர் குழந்தைகளோடு சேர்ந்து கும்மி பாட்டு பாட குழந்தைகள் கும்மி கொட்டி வட்டமிட பள்ளி ஆசிரியர்களுடனும் குழந்தைகளோடும், நானும் கும்மி கொட்டி வட்டமிட..அடடா

சமத்துவப்பொங்கல் என்பது இதுதானோ...ஆசிரியர்கள் இஸ்லாம்,கிறித்தவ,இந்து சமயம் என மூன்று மதங்களைச்சேர்ந்த ஆசிரியர்கள் ஒன்றாய் அசோக் நகர் பள்ளியில்..

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இவ்வாண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருதைப்பெற்றுள்ளார்...ஒற்றுமையாக அனைத்து ஆசிரியர்களும் இணைந்து பணியாற்றிய விதம் அருமையாக இருந்தது,,




சர்க்கரைப்பொங்கல்,வெண்பொங்கல்,கதம்ப கூட்டு என தயார் செய்து படையலிட்டனர்.இவ்விழாவில் அப்பகுதி கவுன்சிலர்,சகோதரர் பஷீர் அலி,பெற்றோர்கள்,செல்வா சாரின் மனைவியும் மகளும்...கலந்து கொண்டு விழாவைச்சிறப்பித்தனர்..

குழந்தைகள் பொங்கலை ரசித்து உண்டனர்..எப்படிப்பா இருக்கு என்றேன்...ரொம்ப சூப்பரா இருக்கு டீச்சர் என்றனர்..

இவ்வாண்டு பொங்கல் விழாவை குழந்தைகளுடன் கொண்டாடியது மறக்க முடியாத ஒன்று...
வாழ்த்துகள் அப்பள்ளி ஆசிரியர்களுக்கும்.,செல்வா சாருக்கும்..

10 comments:

  1. வணக்கம் கவிஞரே!

    பதிவும் புகைப்படங்களும் உங்களுடன் இணைந்து நாங்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டதன் உணர்வைத் தோற்றுவித்தது.

    த ம 1
    நன்றி.

    ReplyDelete
  2. படிக்கும் போதே தித்திக்கிறது.
    த ம 2

    ReplyDelete
  3. சுவாரஸ்யமான அனுபவமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  4. இனிவரும் நாட்கள் இனிமையாய் இருக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  5. சிறப்பானதோர் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    குழந்தைகளின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி......

    ReplyDelete
  6. வளர்க சமத்துவம்
    தம +

    ReplyDelete
  7. சமத்துவ பொங்கல் சிறப்பு! பொங்கல் பானையில் வைக்கவில்லை போலிருக்கே!

    ReplyDelete
  8. நல்ல சுவாரஸ்யமான பொங்கல் அனுபவம் இல்லையா சகோ. சிறப்பான நிகழ்வு! சமத்துவப் பொங்கல் வாழ்க!

    ReplyDelete
  9. பொங்கல் வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  10. சமத்துவ பொங்கல்...அழகான பொங்கல்..சூப்பர்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...