இன்று ஒரு சிறப்பு நாளாக...
சுரபி அறக்கட்டளை-மதுரை
சுரபி-சேதுவை சந்தித்த நாள்
சாலையில் சுற்றி திரியும் ஆதரவற்றவர்கள் ,மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள்,பெண்கள்,குழந்தைகளுக்கு உணவு,மருத்துவ பராமரிப்பு போன்ற பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கின்றனர்.
சாலையில் கிடப்பவர்களைப் பார்த்து உச் கொட்டி , இரக்கத்தோடு பேசுகின்றவர்களில் நானும் ஒருத்தி.....
அவர்களுக்குஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உடையவள்.ஆனால் அவற்றை செயல்படுத்துகின்ற உள்ளங்களை நேரில் கண்ட பொழுது மனம் நெகிழ்ந்த நிலை.
எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்ற என் கேள்விக்கு,
சுரபி நிறுவனர் சேது, அரசு மருத்துவமணையில் ஒப்பந்த பணியாளராகப்பணிபுரிந்த போது அங்கு வருபவர்களில் பத்து பேருக்கு எட்டு பேர் ஆதரவின்றி தவிப்பவர்களாகவும்,வேறு ஆதரவின்றி அங்கேயே இறந்து .அடக்கம் செய்யக்கூட ஆளில்லாதவர்களின் நிலையை எண்ணியே இப்பணியைத்தேர்வு செய்ததாகக் கூறிய போது ....
கைக்கூப்பி வணங்கவே தோன்றியது...
சாலையில் வாழும் தன்னிலை மறந்த மனநோயாளிகள்,தானாக நடக்க இயலாத ஆதரவற்றவர்கள்,ஆகியோரைத் தேர்ந்தெடுத்து தினம் ஒருவேளை உணவு அளித்து வருகின்றார்கள்..அவர்களை சுத்தம் செய்து ஆடை அணிவித்து,உணவிட்டுவரும் அவர்களின் பணிக்கு ஈடில்லை .
என்னால் முடிந்த உதவியைச்செய்துள்ளேன்.உணவு சமைக்கத் தேவையான மளிகைப்பொருட்கள்,ஆடைகள் ஆகியவை அத்தியாவசியத் தேவையாக உள்ளன.
சேது போற்றதலுக்குறிய மனிதர் இது போன்ற மனிதர்களால்தான் உலகம் இன்னும் இயங்குகின்றது
ReplyDeleteஉண்மைதான் சகோ..
Deleteசேது போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteபோற்றுவோம்
உதவுவோம்
நன்றி அண்ணா..
Deleteவணங்கப்பட வேண்டிய மனிதர். முன்னரே பார்த்திருந்தால் இந்த வார பாஸிட்டிவ் செய்திகளிலேயே சேர்த்திருப்பேன்.சேமித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteஉண்மைதான்...அடுத்தவாரம் எதிர்பார்க்கிறேன் சகோ..
Deleteசெயற்கரிய செயல்தான். இதில் பணத்தைவிட மனமே வேண்டும். அந்த மனம் அவர்களுக்கு இருந்திருக்கிறது. வாழ்த்துகள்!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
த ம 2
உண்மைதான் சார்...மிக்கநன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteசேதுவுக்கு எனது வாழ்த்துக்கள் இப்படியான மனிதர்கள் இருப்பதால் மனிதம் வாழ்கிறது...த.ம3
எனது பக்கம் வாருங்கள் நம்ம கக்கம் வருவது குறைவு.. வந்து உச்சாகம் தாருங்கள் கருத்து வழி...
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ ..
ReplyDeleteஅவசியம் வருகின்றேன்
சுரபி அறக்கட்டளை குறித்து படித்து இருக்கிறேன்! நல்லமனங்கள் வாழ்க!
ReplyDeleteசுரபி அறக்கட்டளையைப் பற்றி தெரிந்துருந்தாலும் தங்கள் மூலம் மீண்டும் அறிய முடிந்தது. போற்றப்படவேண்டியவர்கள். எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்திகளுக்குப் போய்விடும் என்று நினைக்கின்றோம்...பகிர்வுக்கு மிக்க நன்றி..
ReplyDeleteபகிர்ந்தும் கொண்டோம் சகோ..முகநூலிலும், கூகுள் ப்ளஸிலும்..
ReplyDelete