அன்பான திரை உலக சகோதரர்களுக்கு..
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு சமூக அக்கறை உண்டு என நம்புகின்றேன்..ஏன்னா இதவரை இருந்தவர்களுக்கு இல்லை என்பது உண்மை.
வக்கிரப்பாடல்களைப்பாடித்தான் பணம் பண்ண வேண்டிய இழிநிலையை நீங்கள் எதிர்ப்பீர்கள் என நம்புகின்றேன்.
வெள்ளத்தில் தவித்த மக்களைக்காப்பாற்ற முன் நின்று உதவிய நல்ல உள்ளங்கள் இப்போது நடிகர் சங்க உறுப்பினர்களாக,நடிகர் விஷால் தலைமையில் இருப்பது...
இனி சினிமா சமூகச்சீர்கேடுகளை உண்டாக்கும் காட்சிகளைத்தவிர்க்கும் எனவும் நம்புகின்றோம்...
பெண்களை இத்தனை கேவலமாக்கிய.அவமானப்படுத்திய,தெருவில் இறங்கி போராட வைத்த சைக்கோ சிம்புவை ஏன் அவர்கள் தவிர்க்கிறார்கள்..
”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக்கொளுத்துவோம் “”
என்றான் பாரதி..இப்ப யாரைக்கொளுத்துவது..
இதுவரை இவர்களும் இப்படித்தானே..பெண்ணைப்போகப்பொருளாக்கி காட்டி பணம் சம்பாதித்தோம்...இப்ப கேட்டா நம்மை குறை கூறுவார்களே என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்..போகட்டும் இதுவரை உங்களின் இழிநிலையை பொறுத்துக்கொண்டோம்...
பள்ளிவயது பெண்கள் படிக்காமல் காதல் செய்ய வைத்து சினிமா அவர்களை இளவயது தாயாக்கி மகிழும் நிலை இனி வேண்டாம்..
உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கு இப்படித்தான் சொல்வீர்களா?
ஒருவேளை அவர்கள் தெளிவான அறிவுடன் இருக்கலாம்.ஆனால் இப்போது தான் வீட்டை விட்டு வெளிவரும் முதல்தலைமுறை பெண்களுக்கு படிப்பு முக்கியம் என்பதை சினிமா மறக்கடித்துவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
இனியாவது உங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கின்றார்கள் அவர்கள் வெட்கித்தலைகுனியும் படியான பாடல்களிலும் படங்களிலும் நடிக்காதிருங்கள்...
உண்மையான உங்கள் உழைப்பு இதனால்...கேவலப்படுகிறது என்பதை உணர்வீர்களா சகோதரர்களே...?
பெண்களைப் போற்றிய நம் சமூகம் தான் இன்று அவளை பொதுவெளியில் இயங்க விடாமல் தடுக்க நீங்களும் ஒரு காரணமாகின்றீர்கள் என்பது தெரியுமா?
ஆணுக்கு உபயோகப்படும் போகப்பொருளாக திரைப்படங்கள் அவளை அடையாளப்படுத்தியதன் விளைவால் நாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை உங்களால் உணரமுடிகிறதா?
இனி தெருவில் நடக்கையில் மாங்கா சின்னது பெருசுன்னு கேலி செய்தவர்கள் அடுத்த வக்கிரமாக” பீப்” என கிண்டல் செய்யும் போது நாங்கள் நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டதாக கூனிக்குறுகி நிற்போம் என்பதை எப்படி உங்களுக்கு உணரவைக்க?
யோசியுங்கள்..மாற்றம் உங்களிடமிருந்தே...துவங்கட்டும்..
பெண் அழகனவள் என்பதை விட அறிவானவள், சமூகத்திற்கு தேவையானவள், அவளால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தட்டும் உங்கள் படங்கள்...
மிகவும் நியாயமானதோர் வேண்டுகோள். இனியாவது நல்லதே நடக்கட்டும்.
ReplyDeleteநன்றி சார்...
Delete'பெண் அழகனவள் என்பதை விட அறிவானவள், சமூகத்திற்கு தேவையானவள், அவளால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தட்டும் உங்கள் படங்கள்" இந்த அடிப்படை மாற்றம் வந்துவிட்டால் அனைத்தும் சரியாகும் மா. நல்ல பதிவு.
ReplyDeleteமாற்றம் வரட்டும் அண்ணா..
Deleteசினிமா மட்டுல்ல தொலைக் காட்சிகளி வரும் பெரும்பாலான சீரியல்களும் இதற்கு விதிவிலக்கல்ல! அதையு தடுக்கப் பட வேண்டும்!
ReplyDeleteஉண்மையே புலவர் ஐயா. அதுவும் தினமும் வரவேற்பரையில் வந்தல்லவா ...மக்கள் பார்க்காமல் இருந்தால் புறக்கணித்தால் யாரு ஐயா தொடர்கள் எடுப்பார்கள்?
Deleteஆமாம் அய்யா..அது இன்னும் கொடுமைதான்.
Delete//பெண்களை இத்தனை கேவலமாக்கிய.அவமானப்படுத்திய,தெருவில் இறங்கி போராட வைத்த சைக்கோ சிம்புவை ஏன் அவர்கள் தவிர்க்கிறார்கள்..//
ReplyDeleteநீங்க பாட்டுக்கு பதிவு போட்டுட்டு போயிடூவீங்க! அந்த பையன் அரை லூசா இருக்கும் போதே மைக்கை புடிச்சுகிட்டு வாடா போடான்னு வைவான்.இப்ப முழு லூசானப்புறம் திரை உலகினர் சட்டையை கிழிக்கனும்ன்னு ஆசைப்படறீங்க.
என்ன பண்றது கஷ்டம் தான்..
Deleteஉங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவேண்டியவை....சாட்டையடி வரிகளில் உங்கள் வேதனை தெரிகிறது
ReplyDeleteநிறைவேறினால் நன்மைதானே..
Deleteஅருமை சகோ சரியான சவுக்கடி வார்த்தைகள் இந்த ஜென்மங்கள் இனியெனும் திருந்தா விட்டால் இவர்களை மக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் இதில் கல்லூரி செல்லும் பெண்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாவார்கள் சில தறுதலைகள் அந்த வரிகளை மட்டும் மாற்றிப் பாடும் கேள்வியும் கேட்க முடியாது.
ReplyDeleteஆமாம் சகோ...என்ன பண்றது...பெண்ணாய் பிறந்துவிட்டோமே..
Deleteவணக்கம்
ReplyDeleteசொல்லிய வார்த்தைக்கள் ஒவ்வொன்றும் சவுக்கடியாக உள்ளது... இனியாவது திருந்தட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்கநன்றி சார்.
Deleteநல்ல கருத்து!
ReplyDeleteமிக்க நன்றி சார்.
Deleteதிரை உலக சகோதரர்களுக்கு வேண்டுகோளா...
ReplyDeleteகருப்புப் பணம் பற்றி படம் எடுப்பார்கள்
தியேட்டரிலோ
டிக்கெட் விலையை தாறுமாறாக ஏற்றி ஒரு மாதப் பணத்தை
ஒரு வாரத்தில் எடுக்கப் பார்ப்பார்கள்....
தவறான இடத்தில் கோரிக்கை வைக்கிறீர்கள்
ஆமாம் அண்ணா...சண்டைக்காரன் கால்லயே விழுந்துடலாம்னு தான்.
Deleteநல்ல பதிவு...
ReplyDeleteமிக்கநன்றி சார்.
Deleteஇனியாவது திருந்துவார்களா...பார்ப்போம்.
ReplyDeleteபார்ப்போம் சார்..
Deleteசரி சரி.. அடுத்த வலைப்பதிவர் பயிற்சி முகாமுக்குத் திட்டமிடணும் பா. பொங்கல் கழித்து, கேஜி தனியா, உநிமேநிப தனியா, கல்லூரி லெவல் தனியா நடத்துவமா? (நானெல்லாம் உநிப லெவல்தான்! லோயர் மிடில் கிளாஸ்)
ReplyDeleteஅய் ஜாலின்னா....ரொம்ப போர் அடிக்குது...அண்ணா அடுத்த ஆண்டும் நாமளே வலைப்பதிவர் சந்திப்பு கொண்டாடிலாமா....முறைக்காதீங்க ...நான் எல்கேஜி அண்ணா..
Delete'பெண் அழகனவள் என்பதை விட அறிவானவள், சமூகத்திற்கு தேவையானவள், அவளால் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தட்டும் உங்கள் படங்கள்" // நிச்சயமாக அப்படி உருவானால் இந்தச் சமூகமே நன்றாக மாறிவிடுமே சகோ..
ReplyDeleteமாறவேண்டும் சகோ...
Deleteசரியான வேண்டுகோள். விழவேண்டியவர்களின் காதுகளில் விழட்டும்.
ReplyDeleteநல்லதோர் வேண்டுகோள்..... மாற்றம் நிச்சயம் வரவேண்டும். செய்வார்கள் என நம்புவோம்.
ReplyDeleteநன்றாக அலசி உள்ளீர்கள்
ReplyDeleteநம்மாளுங்க திருந்தணும்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
http://www.ypvnpubs.com/