திரைப்படம்னா இது தாங்க படம்-------பசங்க -2
வாழ்த்துகள் இயக்குனர் பாண்டிராஜ் சகோதரருக்கு
தரமான,தேவையான,,எந்த வித ஆபாசமும் இல்லாமல் சமூக அக்கறையோடு திரைப்படம் எடுத்து அதை வெற்றி ப்படமாக திரையிட்டமைக்கு..
வர்த்தரீதியாக மாறிப்போன கல்வி வியாபாரத்திற்கு ஒரு சாட்டையடி...
தனக்கு கிடைக்காத எல்லாம் குழந்தைகட்கு கிடைக்கணும்னு குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத பெற்றோருக்கு ஒரு சவுக்கடி....
எத்தனை போலியான வாழ்க்கையை குழந்தைகட்கு கொடுத்து...அதுதான் சரி என்ற ஆதிக்கமனப்பான்மைக்கு,வெற்று ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு குண்டு வைத்து தகர்த்து உள்ளார்...
இதில் சூர்யா பாடம் எடுக்கிறார் ,,,வளவளன்னு பேசுறார்னு சொன்னவங்களுக்கு எல்லாம் அவர்கள் எதிர்பார்த்த ஆபாசக்காட்சிகள் இல்லையென்ற வருத்தம் இருக்கலாம்...ஆனா வேற வழியில்லை ....திரைப்படத்தால் அழிந்து போன இளந்தலைமுறைக்கு இப்படிப்பட்ட திரைப்படங்களில் வரிசையால்....கொஞ்சம் மாற்றம் மெல்ல மலரட்டும்...
ஒவ்வொரு ஆசிரியரும்,கல்வியாளர்களும் பார்க்க வேண்டிய ,படமாய் பசங்க-2 உள்ளது...
வாழ்த்துகள் இத்திரைப்படத்தை துணிந்து எடுத்த தயாரிப்பாளருக்கும்,இயக்குனருக்கும்...உண்மையாக வாழ்ந்த நடிகர்களுக்கும்....
பார்க்கணும் விரைவில்.
ReplyDeleteபாருங்க சீக்கிரமா..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
பசங்க2 படம் பற்றி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இறந்த சடலத்தின் கற்பனை அழுகை.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி சகோ...இனிய புத்தாணடு வாழ்த்துகள்..
Deleteபார்க்கணும் கண்டிப்பாக..பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..
ReplyDeleteகட்டாயம் பாருங்க...அரை பாதி சிரிச்சுக்கிட்டே இருந்தேன்...அடுத்த பாதி மனம் நெகிழ்ந்து ..
Deleteஎனது வாழ்த்துக்களும்
ReplyDeleteவிரைவில் பார்ப்பேன் சகோதரியாரே
அவசியம் பாருங்க அண்ணா..
Deleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteநானும் எழுதியிருக்கேன் அக்கா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.