விக்டரி அரிமா சங்கம்...புதுகை
குழந்தைகள் தினவிழா போட்டி
நேற்று புதுகை நகர்மன்றத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் பேச்சுப்போட்டி,கட்டுரை,ஓவியப்போட்டிகள் நடந்தன...
மூன்று நிலைகளில் 6-8,9-10,11-12 போட்டிகள் நடந்தன...பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக நான்,அனுசுயா,மற்றும் மாலதி மூவரும் கலந்து கொண்டோம்..
அழகான தலைப்புகள் அன்பால் உலகை வெல்வோம்,ஆ’கலாம் ஆகலாம்,சேவையால் சிகரம் தொடுவோம் ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் மிக அருமையாகப்பேசினர்...
கடலரசி என்ற மாணவி அனைவர் மனதையும் கவர்ந்து போட்டிகளில் முதல்பரிசை வென்றார்...
குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை இனிமையாகக் கழித்தோம் மூவரும்...
எங்கள் பள்ளி மாணவிகள் ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகளை வென்றனர்...
சிவயோகமதி என்ற மாணவியின் அம்மா என்னிடம் உங்களைப்பார்க்கத்தான் வந்தேன்மா..என் மகள் எப்போதும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கிறாள்.அம்மா இப்படி இருக்கச்சொன்னாங்கன்னு,அதைச்செய்யச்சொன்னாங்கன்னு நீங்க சொன்னதத்தான் கேட்குறா...மிகவும் மகிழ்ச்சிம்மா இந்தப்பள்ளியில் சேர்த்ததற்கு பெருமைப்படுகின்றேன்..என்று கூறிய போது ,சரியா பணியைச்செய்கின்றோம் என்ற மனதிருப்தி வந்தது...இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு...ஒரு நல்ல அம்மாவாக என் மாணவிகளுக்கு இருப்பதால் வரும் மனநிறைவு..எதற்கும் ஈடாகாது..
இந்த வாய்ப்பை நல்கிய புதுகை விக்டரி அரிமா சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி..
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரி
இனிய குழந்தைள் தின வாழ்த்துக்கள். த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடலரசி, சிவயோகமதி - என்ன அழகான தமிழ்ப் பெயர்கள். எங்க ஊர்ல இருக்கும் சில பெயர்கள் - தக்ஷ்ஷதா, ரச்சனா, ஸ்ருதி, ஸ்வேதா - நாம் தமிழர்களா என்கிற சந்தேகம் வருகிறது.
ReplyDeleteவெற்றி பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்,
ReplyDelete