Saturday 15 August 2015

bloggers meet 2015-பதிவர் திருவிழா-11.10.15 பதிவு -3

வலைப்பதிவர் திருவிழா 11.10.15

கலை கட்டத்துவங்கியுள்ளது.... இவ்விழா பற்றி தோழர் இரா .எட்வின் அவர்கள் தனது பக்கத்தில் எழுதியுள்ளது இவ்விழாவிற்கு மிக்க வரவேற்பை அளித்துள்ளது...

முன்பே வந்து இங்குள்ள இடங்களைச் சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் நான் அப்பா என அன்புடன் அழைக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூரைச்சேர்ந்த ரத்தினவேல் அய்யா தனது குடும்பத்துடன் வர விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவ்விழாவிற்கென ஒருவங்கிக்கணக்கு  முத்துநிலவன் அண்ணா மற்றும் பொன்.க அய்யா இருவருடைய பெயரிலும் துவங்கப்பட்டுள்ளது.
வரவு செலவு விபரத்தை அண்ணா என்னிடம் கொடுத்து பெரிய பொறுப்பை அளித்துள்ளார்...

விழாவிற்கு முன் தொகை கொடுத்துள்ளவர்கள்

1] நா.முத்துநிலவன்
2]மு.கீதா                    
3]கஸ்தூரிரங்கன்  
4]கருணைச்செல்வி
5]மாலதி                      
அளித்துள்ளனர்....நன்றி அவர்களுக்கு.

இவ்விழா நடத்த புதுக்கோட்டையில் பேராங்குளம் அருகில் உள்ள மக்கள் மன்றம் என்ற புதிய மண்டபத்திற்கு முன் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மூன்று கூட்டங்கள் நடத்தப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.எந்தவிதக்குறையும் இன்றி சிறப்புடன் விழா நடக்க புதுகை கணினித்தமிழ்ச்சங்கம் முனைப்புடன் இயங்குகின்றது.விழாவிற்கு வருபவர்களை சிறப்பிக்க எண்ணி விருதுகள் வழங்க எண்ணியுள்ளோம்...இது யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல...மேலும் பலர் அவர்களைப்பின்பற்றி நடக்க வேண்டும் என்ற ஆசையில் ...மட்டுமே....வலைப்பதிவர்கள் அனைவருமே எங்களுக்கு முக்கியமானவர்கள் தான்...விழாவிற்கு அனைவரையும் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணமே அடிப்படைக்காரணம்.

விருதுகள்

1] வளர் தமிழ் பதிவர் விருது

2] மின் இலக்கியப்பதிவர் விருது

3] வலைநுட்ப பதிவர் விருது

4]விழிப்புணர்வு பதிவர் விருது

5]பல்சுவைப்பதிவர் விருது

உள்நாட்டினருக்கு 5 விருதுகளும் வெளிநாட்டினருக்கு 5 விருதுகளும்

வழங்கப்பட உள்ளன.என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பெண் பதிவர்களுக்கு உள்நாட்டினருக்கு மூன்று விருதுகளும் ,வெளிநாட்டினருக்கு இரண்டு விருதுகளும் 

வழங்கப்பட உள்ளன.விழாவில் கலந்து கொள்பவர்களை சிறப்பிக்கவே இவ்விருது என்பதால் ...அனைவரும் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கின்றோம்.


விழாவிற்கான பதிவர் படிவம் அனுப்பும் பணியை வலைச்சித்தர் டிடி சார் பொறுப்பேற்று எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு தந்து வருகின்றார்.

இவ்விழாவிற்கு கரந்தை ஜெயக்குமார் அண்ணாவும்,விமலன் சாரும் புத்தகம் வெளியிட உள்ளனர்.மேலும் புத்தகம் வெளியிட விரும்புபவர்கள் விரைவில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

குறும்படம் வெளியிடுபவர்களும் தொடர்பு கொள்க.

விழாவில் வலைப்பதிவர்க்கையேடு வழங்க எண்ணியுள்ளோம்....தங்களின் வலைப்பூ முகவரியை தங்களைப்பற்றிய சிறு அறிமுகத்துடன் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.....

சொந்த வீட்டு விழாவைக்கூட இத்தனை ஆவலாய் செய்ததில்லை..அனைவரும் மகிழ்வுடன் பணி புரிய காத்திருக்கின்றோம்..
பதிவர்விழா அனைவரையும் ஒன்றிணைக்கும் விழா ...நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன....நன்கொடை அளிக்கும் விபரம் டிடி சார் பதிவில்...

அன்புடன் வரவேற்க காத்திருக்கிறோம் .

13 comments:

  1. நன்றி சகோ. நானும் அழைக்கின்றேன் அன்புடன் அனைவரும் வாருங்கள் புதுகைக்கு!

    ReplyDelete
  2. நானும் குடும்பத்துடன் வர உத்தேசித்துள்ளேன்
    நிச்சயமாக புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு
    மிகச் சிறந்த சந்திப்பாக இருக்கும் என்பதில்
    யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை
    இந்தச் சீரிய பணியில் தங்களை
    இணைத்துக் கொண்டுள்ள அனைவருக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அட...! அதற்குள் விழாவின் இணைப்பை (Side Gadget) சேர்த்து விட்டீர்கள்... நன்றி... நன்றி...

    ReplyDelete
  4. வாழ்த்துகள் கீதா. களைகட்டுகிறது விழா.உங்களுக்கெல்லாம் அதிக வேலை இருக்கும். அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  5. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. அருமை கீதா. கணினித் தமிழ்ச்சங்கக் கூட்டப் படங்களில் சிலவற்றையும், நன்கொடை தருவோர்க்கு வழிகாட்டியாக கணக்கு எண் விவரங்களையும், பதிவுசெய்யக் கூடிய டிடியின் கூகுள் படிவமுள்ள பக்க இணைப்பையும், முதல் நாள் வரக்கூடியவர்களுக்கான சில யோசனைகளையும் தந்து அடுத்த பதிவை விரைவில் வெளியிட வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  7. வணக்கம்

    நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. வணக்கம்,
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. விழா சிறப்புற எமது வாழ்த்துகளும்...

    ReplyDelete
  11. விழா சிறப்புற எனது வாழ்த்துகளும்.

    ReplyDelete
  12. அக்கா! என்னால் உங்கள் அளவு செயல்பட முடியாது ஆனால் என்ன கஸ்தூரி, நிலவன் அண்ணா, மாலதி டீச்சர், ஜெயம்மா, வைகறை அண்ணா, பாண்டியன் தம்பி என நம்ம குடும்பமே விழா ஏற்பாடுகளில் பம்பரமா சுத்துறீங்களே!

    ReplyDelete
  13. இந்த முறை விழா ஏற்பாடுகளெல்லாம் முன் கூட்டியே நடப்பதும், மிக வேகமாக நடப்பது போலவும் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...