நம்பிக்கை நிறைவேறட்டும்
என் மாணவனும் முகநூல் நண்பனுமான Ramkrishnan அடிக்கடி என்னுடன் பேசும் போதெல்லாம் கட்டாயம் மாணவர்களை சிறந்த அரசியல்வாதியாக உருவாக்கனும்னு அன்பாக கட்டளையிடுவான்.
மாணவிகளின் எதிர்காலம் பற்றி நான் கேட்கும் போதெல்லாம் அனைத்து தொழில்களையும் விட நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த அரசியல்வாதியாக ஆக வேண்டும் என்றுதான் வலியுறுத்துவேன்.
இன்று காலை அவன் பேசும் பொழுதும் இன்னும் ஐந்து வருடங்களுக்குள் நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும் என்று கால எல்லை வைத்தான் ...சரிப்பா ஆனா நான் இருப்பது பெண்கள் பள்ளியாச்சே பெண்குழந்தைகள் முன் வந்தாலும் அவர்களின் பெற்றோர் ஒத்துழைக்க மாட்டாங்களே என்றேன் வருத்தமாய் உடனே நீங்க மாணவிகளைத்தயார் செய்யுங்க அவர்களின் பெற்றோர்களை நான் மாற்றுகிறேன் என்றான் நம்பிக்கையுடன்...ஆச்சர்யமாக இருந்தது அவனது தன்னம்பிக்கைக்குறித்து....
இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் இவ்வேளையில் இக்கருத்தை வலியுறுத்திக்குறப்போகின்றேன்...
முயற்சிப்போம் .....நல்ல அரசை அமைக்கக்கூடியத்தூண்களை உருவாக்க.....
எங்களது வாழ்த்துக்களும்...
ReplyDeletetha.ma 1
ReplyDeleteநல்லது ஆசிரியரே... முயற்சி திருவினையாக்கும்...
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஎன் ஆசையும் இது தான்,
முயலுங்கள் நாங்களும்,,,,,
நம்பிக்கையுடன்,
நன்றி.
கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. இம்முயற்சி வெற்றி அடைந்தால் பெரும் வெற்றிதான்...வாழ்த்துகள்!
ReplyDeleteநல்ல அரசியல்வாதிகள் உருவானால் நல்லதுதான்! ஆனால் அரசியல் நல்லவனாக இருக்க விடுமா? உதாரணம் கேஜ்ரிவால்!
ReplyDeleteநல்ல கருத்து. நல்ல பகிர்வு. முயற்சியில் இறங்கட்டும்.
ReplyDeleteநீங்கள் தேர்ந்தடுக்கும் மாணவர்களுக்கு பயிற்சி தர காத்திருக்கிறேன்
ReplyDeleteதலைமைப்பண்பு..
இலக்கமைத்தல்
போன்ற தலைப்புகளில்
தம +
முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்.
ReplyDelete